ஜல்லிக்கட்டில் காளை மாடுகள் துன்புறுத்தப்படுவதாக பொதுமேடையில் பொங்கி எழுந்த கிரண்பேடி ஆர்.ஜே.பாலாஜியின் அடுக்கடுக்கான கேள்விகளால் மூக்குடைப்பட்டார். ஆர்.ஜே.பாலாஜிக்கு ஆதரவாக கைதட்டல் எழுந்தது.

தமிழர்களின் பாரம்பரிய கலாச்சார நிகழ்வுகளில் ஒன்று ஏருதழுவுதல் என்று அழைக்கப்படும் ஜல்லிக்கட்டு. இதற்கென வளர்க்கப்படும் ஜல்லிக்கட்டு காளைகளை அடக்கும் ஒரு போட்டி. இதற்காக 144 வகையான காளைகள் தமிழகம் முழுதும் வளர்க்கப்படுகின்றன.

விவசாயத்தோடு , விவசாயிகளின் வாழ்க்கையோடு ஒன்றிய இந்த காளை இனங்களை அழிக்கும் நோக்குடன் கிளம்பிய பீட்டா என்ற அமைப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தடை வாங்கியது. ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசுவதும் , அதை ஏதோ காளைகள் வதை என்பது போல் பேசுவதும் பேட்டி அளிப்பதும் தற்போது ஃபேஷனாகி வருகிறது.

நேற்று இதே போல் இந்தியாடுடே கருத்தரங்கில் நேற்று கலந்துகொண்ட புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மூக்குடைப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. 

புதுவை துணை நிலை ஆளுனர் கிரண்பேடி, சென்னையில் நடைபெறும் இந்தியா டுடே நடத்தும் நிகழ்ச்சியில் ஜல்லிக்கட்டு குறித்து பேசினார். அப்போது ஜல்லிக்கட்டு என்ற பெயரில் மாடுகள் சித்தரவதை செய்யப்படுகின்றது. நேற்றுகூட ஒரு வீடியோ பார்த்தேன் மாட்டின் வாலை பிடித்து இழுத்து துன்புறுத்துகின்றனர். இது விளையாட்டா என்று கேட்டார்.  உச்ச நீதின்றம் தடை செய்தது சரி. என ஆங்கிலத்தில் பேசினார்.

அதே விவாத நிகழ்ச்சியின் நெறியாளர் ஆர்.ஜே. பாலாஜியிடம் இது பற்றி உங்கள் கருத்து என்ன என்று கேட்டார்.  ஆர் ஜே பாலாஜி, குறுக்கிட்டு தனக்கே உரிய பாணியில் ஆங்கிலத்தில் பேசி , மேலும்,

 நான் குஜராத் சென்றிருந்தேன். அங்கே ஒட்டகங்கள் மீது கடுமையான சுமை கொண்ட மூட்டைகள் சுமக்க வைக்கப்படுகின்றது. டன் கணக்கில் ஒரு வாகனத்தில் ஏற்றும் அளவுக்கு சுமைகளை ஏற்றி நெடுஞ்சாலைகளில் எடுத்து செல்கிறார்களே மேடம் அது சித்தரவதை இல்லையா?, ராஜஸ்தான் டெலிக்கு பக்கத்தில் தானே இருக்கிறது அது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா அதைவிட்டு விட்டு 2000 மைலுக்கு அப்பால் இருக்கும் காளைகள் விளையாட்டுத்தான் உங்களுக்கு மிருக வதையாக தெரிகிறதா? 

யானைகள் , ஒட்டகம் மீது பாரம் ஏற்றி வதைப்பதை  அதை தடை செய்ய முடியுமா? எனவும் கிரேன்பேடியை பார்த்து ஆர் ஜே பாலாஜி கேள்வி எழுப்பினார்.

கேரளாவில் கோவிலுக்கு கோவில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. அங்கு யானை ரேஸ் விடப்படுகிறது. அதில் யானைகள் துன்புறுத்தப்படவில்லையா என்ற கேள்வி எழுப்பினார். அதை தடை செய்ய சொல்ல மாட்டீர்களா?

தோலுக்காக மாட்டை அறுத்து அதன் தோலை ஏற்று மதி செய்யும் நிறுவனங்களை முதலில் இந்தியாவில்  தடை செய்யுங்கள். அது சித்தரவதை இல்லையா?” எனக் கேள்விக் கேட்டதும். அவர் விழித்தார்.  அமர்ந்திருந்த அனைவரும் ஆரவாரத்துடன் கை தட்டினர்.”நீங்க காலில் போட்டிருக்கும் செருப்பு லெதர் செருப்பு, எதில் இருந்து வந்தது மேடம்? என பாலாஜி கேட்டதும்   கிரேன் பேடி வாயடைத்து போனார்.

அவர் பேச முடியாமல் இந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் இருக்கிறது , என்று மழுப்பினார் , அதற்கு பதிலளித்த ஆர்.ஜே .பாலாஜி உச்ச நீதிமன்ற தீர்ப்ப மதிக்க வேண்டும் என்று சொன்னீர்களே, தமிழ்நாட்டிற்கு தண்ணீர் விட சொல்லி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம், அதை யார் மதித்தது? கர்நாடகா அதை மதிக்கவே இல்லை , மதிக்காதவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? என்று கேட்டவுடன் பலத்த கரகோஷம் ஆடியன்ஸ் பக்கமிருந்து எழுந்தது.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் “” எந்த பக்கம் போனாலும் கேட்டு போட்றானே “” என்று வடிவேல் சொல்வது போல் “” ஙே ””என்று விழித்தார் கிரண்பேடி