ஜல்லிக்கட்டுக்காக தொடர்ந்து போராடி வரும் நடிகர் லாரன்ஸ் நேற்று உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் இன்று மீண்டும் இளைஞர்களுக்கு துணையாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
இது குறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய லாரன்ஸ், உணர்ச்சி பொங்க அவருடைய கருத்தை போராட்ட களத்தில் பதிவு செய்தார்.
அப்போது பேசிய அவர், தமிழகத்திற்காக சட்டத்தை மாற்று என கூறினார். எப்போதுமே மக்களுக்காகத்தான் சட்டங்கள் உள்ளதே தவிர, சட்டத்திற்காக மக்கள் இல்லை என தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் பலர் இங்கு 6 நாட்காக வீடுகளுக்கு கூட செல்லாமல் தமிழன் என்கிற உணர்வோடு போராடி வருவதாக கூறினார். மேலும் இந்த இளைஞர்களின் போராட்டம் ஜல்லிக்கட்டுக்கு முழுமையான தீர்வு கிடைக்கும் வரை தொடரும் என தெரிவித்தார்.
