நடிகர் பிரகாஷ் ராஜ் நடிப்பில் மட்டும் அல்ல நிஜ வாழ்விலும் மிகவும் உணர்ச்சிவச படக்கூடியவர் . ஏற்கனவே சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கர்நாடகா காவேரி பிரச்சனை குறித்து கேட்டப்போது எந்த ஒரு பதிலும் கூறாமல் அங்கிருந்து வெளியேறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
தற்போது திருப்பதி சென்ற இவரிடம் ஒரு நிருபர் ஜல்லிக்கட்டு குறித்து உங்களுடைய கருத்து பற்றி கூறுங்கள் என கேட்டுள்ளார்.
அதற்கு அவர் எந்த ஒரு பதிலும் தெரிவிக்காமல், அந்த நிருபரை தாக்க வந்துள்ளார், எதற்கு இப்படி செய்தார் என்று அங்கு இருக்கும் யாருக்கும் இது வரை புரியவில்லை.
தமிழ் நாடே தங்களுடைய கலாச்சார விளையாட்டை மீட்க போராடி வருகின்றனர், இந்த போராட்டத்திற்கும் பல நடிகர் நடிகைகள் மக்களோடு மக்களாக நின்று போராடி வரும் நிலையில் இவர் இப்படி செய்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இவர் நடிகர்சங்கம் நடத்திய உண்ணாவிரதம், போன்ற எந்த ஒரு போராட்டத்திலும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடதக்கது.
