jallikattu julie felt in new problem
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அரசியல் தலைவர்கள் பற்றி அவதூறாக கத்தியதால் மீடியாக்களால் கவர்ந்திழுக்கப்பட்டு, பிரபலமாக்கப்பட்டவர் ஜூலி. சாதாரண செவிலியராக இருந்த இவர், தற்போது இந்தப் போராட்டத்தின் மூலம் பலரால் கவனிக்கப்பட்டவராக மாறி, சமீபத்தில் நடந்து முடித்த பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு. பல்வேறு விமர்சனங்களை சந்தித்தார்.

தற்போது, பிக் பாஸ் ஜூலி பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராக மாறி லட்சக்கணக்கில் சம்பாதிக்கும் தொகுப்பாளினியாக மாறியது மட்டுமின்றி, திரைப்படங்களில் நடிக்கவும் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் இந்தப் போரட்டத்தில் கலந்துகொண்ட போலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரபலங்களுக்கு நீதிபதி சம்மன் அனுப்பியது போல் ஜுலிக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஜல்லிக்கட்டால் வந்த புகழை மட்டும் அனுபவித்து வரும் இவர் தற்போது முதல் முறையாக இந்தப் பிரச்சனையை எதிர்கொள்ள இருக்கிறார்.
