jallikattu julee intresting talk

பாலிவுட்டில் பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் நிகழ்ச்சி பிக் பாஸ், இந்த நிகழ்ச்சி தற்போது தமிழுக்கும் வந்துள்ளது. இதை உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

இந்த நிகழ்ச்சியின் முதல் நாளானே நேற்று, வழக்கு எண் 18 , ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடித்த ஸ்ரீ ராம் வெளியேற உள்ளதாக ஜல்லிக்கட்டுக்கு போராட்டத்தில் பிரபலமாகிய ஜூலியிடம் கூறியுள்ளார்.

அதற்கு ஜுலீ, “இந்த செட்டுக்குள் வந்த அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டி தழுவிக்கொண்டார்கள். ஆனால், என்னை கட்டிப்பிடிக்க தான் ஆள் இல்லை. நீ என்னை விட்டு போகாதே..என் நிலைமையை கொஞ்சம் யோசிச்சுப்பாரு... என்று ஆதங்கதோடு நடிகர் ஸ்ரீ ராமிடம் கூறியது காட்சியாக வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.

இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டதும், பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரொம்ப ஹாட் டாப்பிக்காக மாறிவிட்டது. அதுமட்டுமல்ல, ஜூலியின் பேச்சு குறித்து சமூக வலைதளங்களில் பரபரப்பான விவாதமும் நடைபெற்று வர, போக போக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படிப்பட்ட சம்பவங்கள் அரங்கேறப்போகிறதோ, என்ற எதிர்ப்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.