தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டை மீட்க தமிழகத்தின் ஓட்டுமொத்த மாணவர்களும் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டம் மற்ற நாடுகளில் உள்ள பலரையும் திரும்பிப்பார்க்க வைத்தது.

100 மாணவர்கள் சேர்ந்து ஆரமித்து இந்த போராட்டம், பல லட்ச மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள், குழந்தைகள் என ஒன்று திரண்ட மாபெரும் போராட்டமாக மாறியது. 

இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட அணைத்து மாணவர்களும் வன்முறையை தவிர்த்து அறவழியில் தங்களுடைய கருத்தை முன்வைத்தனர்.

தொடர்ந்து 6 நாட்கள் இவர்கள் போராட்டம் நடத்தியதன் பலனாக, ஜல்லிக்கட்டுக்கு அவசர கொண்டுவந்தது தமிழக அரசு, தற்போது நிரந்தர சட்டம் கொண்டுவர ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இந்நிலையில் முதலமைச்சருக்கு நன்றி சொல்வதற்காக மாணவர்களுடன் சேர்ந்து சென்று முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய லாரன்ஸ்.

செய்தியாளர்கள் கேள்விகளுக்கு பதிலளித்தார், அப்போது மாணவர்கள் பற்றி எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், போராட்டத்திற்காக திரண்ட மாணவர்கள் அமைதியான முறையில் மட்டுமே போராட்டம் நடத்தியதாகவும்.

போராட்டத்தின் பொது மாணவர்கள் யாரையும் தவறாக சித்தரித்து கோஷங்களை எழுப்பவில்லை என தெளிவு படுத்தினர், தொடர்ந்து இந்த போராட்டத்தை நாங்களே 7வது நாள் அன்று 500 கிலோ கேக் வெற்றி தங்களுடைய வெற்றியை கொண்டாடி நிறைவு செய்வதாக இருந்தோம் .

ஆனால் போலீசாரின் தவறான புரிதலால் அனைத்தும் தலைகீழாக மாறிவிட்டது என வருத்தம் தெரிவித்தார்.