ஒட்டு மொத்த தமிழ் இளைஞர்கள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி தான், மீண்டும் அரசின் அனுமதியோடு நடைபெற்ற ஜல்லிக்கட்டு விளையாட்டு.
ஜல்லிக்கட்டுக்கு பிரசித்திபெற்ற அலங்காநல்லூரில் நேற்று ஆயிரக்கணக்கான மாடு பிடி வீரர்கள் பங்குபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் போராட்டத்தில் பங்கு பெற்ற 100 மேற்பட்ட மாணவர்கள் நேரில் கலந்து கொள்வதற்கு அலங்காநல்லூர் சென்றனர்.
இவர்களுடன் நடிகர் ராகவா லாரன்ஸ், நடிகர் ஆரி போன்ற பிரபலங்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை அருகில் இருந்து பார்க்க சென்ற இவர்களை போலீசார், மற்றும் விழா குழுவினர் அனுமதிக்க வில்லை.
ஆனால் லாரன்ஸ் மற்றும் ஆரியை மற்றும் அனுமதித்ததாக கூறப்படுகிறது. இதனால் லாரன்ஸ் அவர்களிடம் எவ்வளவோ எடுத்துக்கூறியும், மாவட்ட ஆட்சியரை தொடர்பு கொண்டு அனுமதிக்குமாறு கேட்டபோதிலும் பாதுகாப்பு கருதி மறுத்துவிட்டனராம்.
நிலைமையை புரிந்து கொண்ட லாரன்ஸ், சில மணிநேரங்கள் வரை ஜல்லிக்கட்டை பார்த்து விட்டு பாதியிலேயே , மாணவர்களோடு அந்த இடத்தை விட்டு புறப்பட்டு விட்டாராம்.
