பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி சக்கைபோடு போட்டு வரும் திரைப்படம் தான் ஜெயிலர்.

இதற்கு முன்னதாக வெளியான உலக நாயகனின் விக்ரம் உள்பட பல சிறந்த படங்களின் வசூல் சாதனையை முறியடித்து பயணித்து வருகிறது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம். இன்று செப்டம்பர் 7ஆம் தேதி இந்த திரைப்படம் OTT தலமான அமேசான் பிரைம் வீடியோவில் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழக அளவிலும் மற்றும் பிற இந்திய மாநிலங்களிலும் சுமார் 400 கோடி வசூல் செய்துள்ள ஜெயிலர் திரைப்படம், உலக அளவில் 600 கோடி ரூபாய் என்ற மாபெரும் வசூலை தாண்டி பயணித்து வருகிறது. இதனால் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ள இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கலாநிதி மாறன் அவர்கள், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன் திலீப்குமார் மற்றும் இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டவர்களுக்கு பெருந்தொகையையும், சொகுசு கார்களையும் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

உதயநிதிக்கு வரிந்து கட்டிக்கொண்டு ஆதரவு தெரிவித்த மாரி செல்வராஜ் - சத்யராஜ் உள்ளிட்ட பிரபலங்கள்!

அதே போல இந்த தயாரிப்பு நிறுவனத்தில் செயல்பட்டு வரும் காவேரி கலாநிதி அவர்கள், சில திணைகளுக்கு முன்பாக 100 குழந்தைகளின் ஆபரேஷன் செலவிற்காக ஒரு கோடி ரூபாயை வழங்கியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இன்று செப்டம்பர் 7ஆம் தேதி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பாக கலாநிதி மாறன் அவர்களின் மனைவியான காவேரி கலாநிதி அவர்கள், 60 லட்சம் ரூபாய் மதிப்பிலான காசோலை ஒன்றை அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டில் உள்ள நோயாளிகளுக்காக வழங்கியுள்ளார். 

Scroll to load tweet…

அடையாறு கேன்சர் இன்ஸ்டிடியூட்டின் மூத்த மருத்துவர்களாக உள்ள டாக்டர் கல்பனா பாலகிருஷ்ணன் மற்றும் ஹேமாத் ராஜாவிடம் அந்த காசோலை வழங்கப்பட்டது. அங்குள்ள வசதி குறைந்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த பணம் செலவிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஜினி போட்ட ஆர்டர்? 100 குழந்தைகள் ஆபரேஷனுக்கு 1கோடி வழங்கிய கலாநிதிமாறன் மனைவி! குவியும் வாழ்த்து!