இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான படங்கள் பலவும் பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்த நிலையில் இவர்கள் இருவரின் வெவ்வேறு படங்கள் ஒரே நாளில் வெளியாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இறுதியாக அண்ணாத்த படத்தில் நடித்திருந்தார். இதில் கீர்த்தி சுரேஷ் தங்கையாக நடித்திருந்தார். கலவையான விமர்சங்களை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து தற்போது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் ரஜினிகாந்த். பீஸ்ட் படம் தோல்வி அடைந்திருந்தாலும் சூப்பர் ஸ்டார் மூலம் வெற்றி கண்டுவிடலாம் என்கிற எண்ணத்தில் தற்போது முனைப்பாக ஈடுபட்டு வருகிறார் நெல்சன் திலீப்குமார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஜெயிலர் படத்தில் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் என பலரும் கமிட்டாகியுள்ளனர்.
இந்த படத்திற்கும் அனிருத் ரவிச்சந்திரன் தான் இசையமைப்பாளர். முதல் கட்ட படப்பிடிப்பை சென்னையில் முடித்துவிட்ட பட குழு தற்போது கடலூரில் பணியை துவங்கியுள்ளது. படப்பிடிப்பு தளத்திலிருந்து ரஜினிகாந்தின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலாகி இருந்தது. இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக லைகா தயாரிக்கும் அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார் ரஜினிகாந்த். இது குறித்த அப்டேட் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகளுக்கு...மாஸ் பிளானுடன் ரெடியாகும் சூர்யா 42...6 நாடுகளில் படப்பிடிப்பாம்...

ஜெயிலர் படம் அடுத்தாண்டு தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. அதேபோல சங்கர் இயக்கத்தில் தயாராகி வரும் ராம் சரனின் 15வது படமும் அதே தினத்தில் தான் வெளியாக உள்ளதாம். இயக்குனர் சங்கர் தற்போது ராம்சரனின் 15 வது படம் மற்றும் கமலின் இந்தியன் 2 ஆகிய படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...Chiyaan61 : முகத்தில் சாம்பலுடன் மாஸ் லுக்கில் விக்ரம்...சீயான் 61 பர்ஸ்ட் லுக்..

இதில் ஆர்சி 15 படம் கிட்டத்தட்ட முடிவுற்றதாக தெரிகிறது. 80 சதவீத பணிகள் முடிவடைந்ததால், இந்த படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் இது அடுத்த ஆண்டு தமிழ் புத்தாண்டு வெளியீடாக இருக்கும் என கூறப்படுகிறது. இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினி கூட்டணியில் வெளியான படங்கள் பலவும் பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்த நிலையில் இவர்கள் இருவரின் வெவ்வேறு படங்கள் ஒரே நாளில் வெளியாவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
