சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் ஜெயிலர் திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகி உலக அளவில் சக்கபோடு போட்டு வருகிறது என்றால் அது சற்றும் மிகையல்ல.
படம் பார்த்த அனைத்து ரசிகர்களும் சொல்லும் ஒரே விஷயம், 80களில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அதே வேகம், அதே ஸ்டைல் இந்த ஜெயிலர் திரைப்படத்தில் இருப்பதாக கூறி படத்தை பெரிய அளவில் கொண்டாடி வருகின்றனர். முதல் நாள் வசூலாக தமிழகம் உட்பட பல மாநிலங்களில் பல சாதனைகளை முறியடித்து சுமார் 53 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது ஜெயிலர் திரைப்படம் என்று கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் நடித்த பலருடைய நடிப்பை வெகுவாக பாராட்டி வரும் ரசிகர்கள் குறிப்பாக ஒரு நடிகரின் நடிப்பை குறித்து அமோகமாக பேசி வருகின்றனர். ஒரு படத்தில், அதிலும் சூப்பர் ஸ்டார் போன்ற ஒரு மிகப்பெரிய நட்சத்திரம் நடிக்கும் இந்த திரைப்படத்தில் ஹீரோவை காட்டிலும், அப்படத்தில் வரும் வில்லன் எந்த அளவுக்கு கொடூரமானவர் என்பதை கொண்டுதான் அந்த படத்தில் ஹீரோவின் வேகத்தை கணக்கிட முடியும்.
பான் இந்தியா படமாக உருவாகிறது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் - ஹீரோ இவரா?
அந்த வகையில் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு அசால்ட் வில்லனாக மிக நேர்த்தியாக நடித்திருக்கிறார் விர்மன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பிரபல மலையாள நடிகர் விநாயகன். மலையாள திரை உலகத்தில் பல சிறந்த கதாபாத்திரங்கள் ஏற்று நடித்த விநாயகன், விஷாலின் திமிரு, தனுஷ் நடிப்பில் வெளியான மரியான் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களிலும் நடித்து புகழ்பெற்றவர் ஆவார்.
தனக்கு கொடுக்கப்படும் எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் அதை மிக மிக நேர்த்தியாக நடிக்கும் வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர். மலையாள மொழியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து வரும் நடிகர் விநாயகன் ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் முதன் முதலில் நடித்த திரைப்படம் விஷாலின் திமிரு என்பது குறிப்பிடத்தக்கது.
அதன் பிறகு சிலம்பாட்டம், எல்லாம் அவன் செயல், காலை, சிறுத்தை மற்றும் மரியான் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்த விநாயகன் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் நடிப்பில் வெளியாகியிருக்கும் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு அட்டகாசமான வில்லனாக அதுவும் சூப்பர் ஸ்டாருக்கு ஈடு கொடுக்கும் வில்லனாக நடித்து மக்களின் பாராட்டை வெகுவாக பெற்று வருகிறார்.
அடுத்தபடியாக இவர் விக்ரமின் துருவ நட்சத்திரம் திரைப்படத்திலும் ஒரு முக்கிய கதாபாத்திரம் எடுத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கையில் மது கோப்பையுடன்... கணவருடன் ரொமான்டிக்காக பிறந்தநாள் கொண்டாடிய ஹன்சிகா! வைரலாகும் போட்டோஸ்!
