பான் இந்தியா படமாக உருவாகிறது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் பயோபிக் - ஹீரோ இவரா?
ஆந்திர மாநிலத்தின் முதல்வராக இருக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கையை மையமாக வைத்து பான் இந்தியா திரைப்படம் ஒன்று உருவாக உள்ளது.
நடிகர் அஜ்மல் கோ, நெற்றிக் கண் படங்களின் மூலம் ரசிகர்களுக்கு பரிச்சயமானவர். தொடர்ந்து தமிழில் குறிப்பிடும்படியான படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பிரபல இயக்குனர் ராம் கோபால் வர்மா இயக்கும் புதிய படத்தில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியாக அஜ்மல் நடிக்க உள்ளார். ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படமாக இது உருவாகிறது.
இதுகுறித்து அஜ்மல் கூறும் போது, முதலில் இந்த கேரக்டரில் நடிக்கப் போகிறேன் என்றதும் எனக்கு பல தரப்பில் இருந்தும் பயங்கர எதிர்ப்பும் மிரட்டல்களும் வந்தது. ஆனாலும் அவரைப் பிடித்தவர்கள் இந்த படத்தை எதிர்பார்த்து உள்ளனர். என்னால் முடிந்த வரை அந்த கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்க முயற்சிக்கிறேன்.
இதையும் படியுங்கள்... ஜீவானந்தத்தை வலைபோட்டு தேடும் குணசேகரன்..! உண்மையை உடைப்பாரா ஈஸ்வரி.. எதிர்பார்ப்பின் உச்சத்தில் எதிர்நீச்சல்!
ராம் கோபால் வர்மாவும் எனக்கு இந்த விஷயத்தில் உதவியாக இருக்கிறார். இது எனது திரை வாழ்வில் மிகவும் முக்கியமான படம். மிகப் பெரிய பட்ஜெட்டில் பிரமாண்டமான படமாக 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இது உருவாகிறது. நிச்சயம் படம் மிகப் பெரிய வரவேற்பை பெறும் என்று தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் முதலில் நடிகர் ஜீவா தான் நடிக்க உள்ளதாக செய்திகள் உலா வந்த நிலையில், தற்போது நடிகர் அஜ்மல், ஜெகன் மோகன் ரெட்டியாக நடிப்பது உறுதியாகி உள்ளது. நடிகர் அஜ்மல் தமிழில் ஏற்கனவே கோ, நெற்றிக்கண், அஞ்சாதே, இரவுக்கு ஆயிரம் கண்கள் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... சாதி தான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும்... நாங்குநேரி சம்பவத்தால் கொந்தளித்த ஜிவி பிரகாஷ்