'ஜெயிலர்' படத்தில் காத்திருக்கும் தலைவரின் தரமான சம்பவம்! முத்து வேல் பாண்டியனின் மேக்கிங் வீடியோ வெளியானது!
'ஜெயிலர்' படத்திலிருந்து நடிகர் ரஜினிகாந்தின், முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ள நிலையில் சமூக வலைதளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், மிகவும் பரபரப்பாக உருவாகி வரும் திரைப்படம் 'ஜெயிலர்'. இப்படத்தை 'பீஸ்ட்' படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க, ரஜினிகாந்தின் 'அண்ணாத்த' படத்தை மிகப்பிரமாண்டமாக தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனமே 'ஜெயிலர்' படத்தையும் தயாரித்து வருகிறது.
மேலும் இப்படத்தில், ரஜினிகாந்துக்கு ஜோடியாக... நீண்ட இடைவெளிக்கு பின்னர் ரம்யா கிருஷ்ணன் நடிக்க உள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ஜாக்கி ஷெரிப், தரமணி பட நடிகர் வசந்த் ரவி, ரோபோ சங்கர், தமன்னா, யோகி பாபு, போன்ற பலர் நடிக்கின்றனர்.
மிகப்பெரிய நட்சத்திர பட்டாளத்தில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படபிடிப்பு தளத்தின் புகைப்படங்கள் மற்றும் படத்தின் ஷூட்டிங் வீடியோஸ் வெளியாகாத வண்ணம் பட குழுவினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது. மேலும் 'ஜெயிலர்' திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள நிலையில். இப்படத்தின் மேக்கிங் வீடியோவை அதிகாரப்பூர்வமாக படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்தின் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட, இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு, ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது. தலைவரின் மாஸான நடிப்பில் வெளியாகியுள்ள இந்த வீடியோவை பார்த்து, கண்டிப்பாக ஜெயிலர் படத்தில் சம்பவம் செய்வார் தலைவர் என ரஜினிகாந்தின் ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள்.
அட்ஜெஸ்ட்மென்டால் முன்னணி இடத்தை பிடித்த நடிகையில் அழகில் மயங்கிய ஹீரோ.! செய்வினை வைத்த பெற்றோர்!