அட்ரா சக்க..! 'ஜெயிலர்' இசை வெளியிட்டு விழா எப்போது தெரியுமா? இடம் - தேதி அறிவிப்பு!
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா தேதி மற்றும் நடைபெற உள்ள இடம் குறித்த தகவலை தற்போது சன் பிச்சர்ஸ் நிறுவனம் அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம் ’ஜெயிலர்’. சமீபத்தில் இந்த படத்தில் ரஜினிகாந்த் நடித்து முடித்த நிலையில், இப்படத்தின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் படு தீவிரமாக நடந்து வருகிறது. அண்மையில் இந்த படத்தில் இருந்து வெளியான, காவாலா லிரிக்கல் பாடல் மற்றும் ஹுக்கும் ஆகிய படங்கள் வெளியாகி தாறுமாறாக வரவேற்பை பெற்ற நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
இந்த படத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சுனில், ஜாக்கி ஷெராப், வசந்த் ரவி, விநாயகன், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஆகஸ்ட் 10ஆம் தேதி இந்த படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், தற்போது 'ஜெயிலர்' படத்தை தயாரித்துள்ள சன் பிச்சர்ஸ் நிறுவனம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஜெயிலர் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா, எப்போது என ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்த நிலையில், இதற்க்கு பதிலளிக்கும் விதமாக இந்த அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஜூலை 28 ஆம் தேதி... நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளதாக புதிய புரோமோவுடன் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் இப்படத்தில் நடித்துள்ள மோகன் லால், சிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.