ரஜினிக்கு வில்லனா நடிச்சா சும்மா விடுவாங்களா! வீட்ட விட்டு வெளிய போக முடியலையாம்- ‘ஜெயிலர்’ விநாயகன் ஓபன் டாக்

ஜெயிலர் படத்தில் வர்மன் என்கிற கொடூர வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான விநாயகன், அப்படத்தின் அனுபவம் குறித்து பேசி இருக்கிறார்.

Jailer movie Actor vinayakan who palyed varman character Speaks about response gan

தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்களில் இன்டஸ்ட்ரி ஹிட் அடித்த படம் என்றால் அது ஜெயிலர் தான். ரஜினிகாந்த் - நெல்சன் கூட்டணியில் வெளியான இப்படம் பட்டிதொட்டியெங்கும் பட்டைய கிளப்பி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 600 கோடிக்கு மேல் வசூலை வாரிக்குவித்துள்ளதால் செம்ம குஷியான இப்படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், ரஜினிகாந்த், நெல்சன், அனிருத் ஆகியோருக்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான சொகுசு காரை பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.

ஜெயிலர் படம் இந்த அளவுக்கு வெற்றிபெற ரஜினி மட்டும் காரணமல்ல, அதில் நடித்த ஷிவ ராஜ்குமார், மோகன்லால் ஆகியோரின் கேமியோ மற்றும் முக்கியமாக இதில் வில்லனாக மிரட்டிய விநாயகனும் ஒரு காரணம். ஜெயிலர் ரிலீசுக்கு முன்பே விநாயகனின் நடிப்பை ரஜினி பாராட்டி இருந்தார். அவர் சொன்னபடி அந்த கேரக்டரில் அவ்வளவு அருமையாக நடித்து அசத்தி இருந்தார் விநாயகன். இந்நிலையில், ஜெயிலர் படத்தில் தனது வர்மன் கேரக்டருக்கு கிடைத்த வரவேற்பு குறித்து பேட்டி ஒன்றில் நெகிழ்ச்சி உடன் பேசி உள்ளார் விநாயகன்.

இதையும் படியுங்கள்... தளபதி 68-ல் நடிக்க மேலும் இரண்டு 90ஸ் ஹீரோக்களை தட்டிதூக்கிய வெங்கட் பிரபு... அடடே இவங்களா!

Jailer movie Actor vinayakan who palyed varman character Speaks about response gan

அதில் தன்னுடைய டிரேட் மார்க் டயலாக்கான மனசிலாயோ எனக்கூறி பேசத்தொடங்கிய விநாயகன், ஜெயிலர் பட அழைப்பு வந்த சமயத்தில் நான் ஒரு படத்தின் படப்பிடிப்புக்காக ஒரு 10 நாள் காட்டுக்குள் இருந்தேன். அங்கு டவர் கிடைக்கவில்லை. இதையடுத்து அந்த படப்பிடிப்பு முடிந்து வந்த உடன் நிறைய மிஸ்டு கால் வந்திருந்ததை பார்த்தேன். இதையடுத்து தான் ரஜினிசார் ஹீரோவாக நடிக்கிற படத்துக்கு வில்லனா நடிக்கனும்னு சொன்னாங்க. ரஜினி சார் படம்னு சொன்னதும் கதையெல்லாம் நான் கேட்கல. பின்னர் நெல்சன் நீங்க தான் முக்கியமான வில்லன்னு சொன்னார்.

வர்மன் கேரக்டர் இந்த அளவுக்கு வந்ததுக்கு ஒரே ஒரு மனுஷன், ஒரே ஒரு பாபா, ரஜினி சார் தான் காரணம். வழக்கமா ஸ்கிரிப்ட் நான் கேட்கமாட்டேன். ஏன்னா பல விஷயங்களால் ஸ்கிரிப்ட் மாறலாம். அதனால் என்னுடைய கேரக்டரைப் பற்றி மட்டும் நெல்சன் சொன்னார். ஆனால் வர்மன் கேரக்டர் இந்த அளவுக்கு ரீச் ஆகும்னு எதிர்பார்க்கல. வீட்டை விட்டு வெளியே போக முடியல. எங்கு போனாலும் வர்மன் தான் சொல்றாங்க, அந்த அளவுக்கு இந்த கேரக்டர் என்னை பாப்புலர் ஆக்கியது. கனவுல கூட இதை நான் எதிர்பார்க்கல.

படத்துல எனக்கு எல்லா சீனுமே பேவரைட் தான். எல்லா சீன் நடிக்கும் போதும் நான் ரொம்ப ஹாப்பியா இருந்தேன். இந்த கேரக்டரை எனக்கு கொடுத்த நெல்சனுக்கு ரொம்ப ரொம்ப நன்றி. ரஜினி சார் இதை நான் மறக்க மாட்டேன். தயாரிப்பாளர் கலாநிதி மாறனுக்கும் ரொம்ப நன்றி” என நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் விநாயகன்.

இதையும் படியுங்கள்... பூக்களே சற்று ஓய்வெடுங்கள்... அவள் வந்துவிட்டாள்! திவ்யா ஸ்பந்தனாவின் ஃபாரின் டிரிப் போட்டோஸ் இதோ

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios