தளபதி 68-ல் நடிக்க மேலும் இரண்டு 90ஸ் ஹீரோக்களை தட்டிதூக்கிய வெங்கட் பிரபு... அடடே இவங்களா!
Thalapathy 68 Update : வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள தளபதி 68 திரைப்படத்தில் நடிகர் விஜய்யுடன் நடிக்க மேலும் 2 ஹீரோக்களை கமிட் செய்துள்ளார்களாம்.
Venkat Prabhu, Vijay
விஜய்யின் லியோ படம் ரிலீசுக்கு தயாராகி வரும் நிலையில், அவரின் அடுத்த படமான தளபதி 68-ன் பணிகளும் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க உள்ளார். விஜய்யின் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தான் இப்படத்தையும் தயாரிக்க உள்ளது. இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
vijay, Yuvan
முதல்கட்டமாக இப்படத்திற்காக விஜய்யுடன் அமெரிக்கா சென்ற வெங்கட் பிரபு, அங்கு விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்திற்காக அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அதற்காக டெஸ்ட் லுக்கையும் நடத்தினார். சுமார் ஒருவாரம் அங்கிருந்த வெங்கட் பிரபு தற்போது சென்னை திரும்பி இருக்கிறார். விரைவில் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. இப்படத்தில் நடிகர் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளாராம்.
இதையும் படியுங்கள்...11 வயதில் தந்தையை இழந்தேன்.. சிங்கப்பெண்ணாக வளர்த்த தாய் - விஜய் டிவி பிரியங்கா வாழ்க்கையில் இப்படி ஒரு சோகமா?
thalapathy 68
தளபதி 68 படத்தில் நடிக்க உள்ள நடிகர், நடிகைகள் குறித்து பல்வேறு தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. முதலில் இப்படத்தில் நடிகர் ஜெய்யும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதையடுத்து விஜய்யின் இளம் வயது கதாபாத்திரத்திற்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. பின்னர் விஜய்யின் மற்றொரு கதாபாத்திரத்திற்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா மற்றும் சிம்ரனிடம் பேச்சுவார்த்தை நடத்தி இறுதியாக சினேகாவை கமிட் செய்துள்ளதாக கூறப்பட்டது.
Prashanth, Prabhu deva
இந்த நிலையில், தற்போது புதுவரவாக, இப்படத்தில் நடிகர்கள் பிரசாந்தும், பிரபுதேவாவும் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதில் பிரபுதேவா உடன் வில்லு, போக்கிரி போன்ற படங்களில் விஜய் பணியாற்றி இருக்கிறார். ஆனால் பிரசாந்த் உடன் அவர் பணியாற்ற உள்ளது இதுவே முதன்முறை ஆகும்.; 90ஸில் விஜய்க்கு சமகால போட்டியாளர்களாக இருந்த இவர்கள் இருவரும் தற்போது விஜய்யுடன் சேர்ந்து நடிக்க உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் தளபதி 68 படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.
இதையும் படியுங்கள்... அரவிந்த் சாமி என்னோட புள்ள தான்... பிறந்த உடனே தத்து கொடுத்துட்டேன் - மனம் திறந்த மெட்டி ஒலி சீரியல் நடிகர்