JAI BHEM : சூர்யாவின் ஜெய்பீமை கைப்பற்றிய பிரபல தொலைக்காட்சி நிறுவனம்; இவரோட டிவியா இது ?

Jai Bhim :ஜெய் பீம் படத்தின் தொலைக்காட்சி வெளியீடான சேட்டிலைட் உரிமையை  கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.  

Jai Bhim (Tamil) satellite rights got Kalaignar TV

நடிகர் சூர்யா தயாரித்து நடித்துள்ள ஜெய் பீம் இருளர்களின் வாழ்க்கையை கண் எதிரே நிறுத்தியுள்ளதாக பிரபலங்களும் அரசியல் தலைவர்களும், நடிகர்களும் பாராட்டி தள்ளுகின்றனர். இந்த படம் பழங்குடியினர் குறித்த தாக்கத்தை தனது மனதில் ஆழமாக பதிய வைத்து விட்டது என தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அவரை தொடர்ந்து நடிகரும் அரசியல் தலைவருமான கமல் ஜெய்பீம் கண்களில் குளமாக்கியதாக கூறி சூர்யாவுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.

இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் இருளர் இனத்துவருக்கான ட்ரஸ்டிற்கு சூர்யா - ஜோதிகா தம்பத்தியினர் ரூ.1 கோடியை முதலமைச்சரை நேரில் சந்தித்து வழங்கி இருந்தனர். இவ்வாறு சமூக வலைத்தளத்தை முழுதுமாக ஆக்கிரமித்துள்ள ஜெய் பீம் லாக்கப் டெத் என்னும் வார்த்தையின் கொடூரத்தை வேறுருவி கட்டியுள்ளதாகவே சமூக ஆர்வலர்களின்  கருத்து உள்ளது.

Jai Bhim (Tamil) satellite rights got Kalaignar TV

இருந்தும் பல அரசியல், சமூகத்தின் எதிர்ப்பு என படம் வெளியானதில் இருந்தே பல பிரச்சனைகளை படம் சந்தித்து தான் வருகிறது.  இந்தஎதிர்ப்பு சூர்யா படத்தை திரையரங்குகளில் வெளியாக விடமாட்டோம், சூர்யா உருவ படத்தை எரிப்போம், சூர்யாவை அடிப்பவருக்கு ஒரு லட்சம் ரொக்க பரிசு என்னும் அளவிற்கு எதிர்ப்பு நீண்டது. ஒருவழியாக இந்த பிரளயம் மெல்ல மெல்ல ஓய்ந்து வருகிறது.

இந்நிலையில் தமிழ், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியான ஜெய் பீம் படத்தின் தொலைக்காட்சி வெளியீடான சேட்டிலைட் உரிமையை உதயநிதி தலைமையில் இயங்கி வரும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது.  

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios