jai and premji started party publicity
சென்னை 28 இரண்டாம் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு, 'பார்ட்டி' படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
வெங்கட் பிரபு மிகவும் ஜாலியான மனிதர் என்று இவருடன் பழகியவர்கள் அனைவருக்கும் தெரியும். அதே போல வேலை என்று வந்துவிட்டால் மிகவும் சீரியஸாக மாறி விடுவார். இந்நிலையில் நேற்று, இவருடைய சகோதரர் பிரேம்ஜியும் நடிகர் ஜெய்யும் மது அருந்திவிட்டு கார் ஓட்டியபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, அடையாறு மேல் பாலத்தில் மீது மோதியது.
ஆனால் ஜெய் மற்றும் ப்ரேம்ஜி இருவரும் விபத்து நேர்ந்தது கூட தெரியாமல் மப்பில் மட்டையாகிவிட்டனர். வெகு நேரமாக கார் பாலத்தில் மோதி நிற்பதைக் கண்டு பொதுமக்கள் கொடுத்த தகவலில் அடிப்படையில் போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
தற்போது மது அருந்தி விட்டு கார் ஓட்டியதைக் கலாய்க்கும் விதத்தில் இயக்குனர் வெங்கட் பிரபு தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் "பார்ட்டி’ திரைப்படத்தின் ப்ரோமோஷனை ஆரபித்து விட்டார்களா என கூலாக ட்விட் போட்டுள்ளார்.
