jai acting neyaa 2

ஜெய்,அஞ்சலி, ஜனனி ஐயர் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான படம் பலூன். இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்திற்கு சரியாக ஒத்துழைக்காததால், பெருமளவு நஷ்டம் ஏற்பட்டதாக இப்படத்தின் தயாரிப்பாளர் போலீசில் புகார் தெரிவித்தார். மேலும், ஜெய்யால் தற்கொலை செய்து கொள்ளும் முடிவுக்கு தான் சென்றதாக இப்படத்தின் இயக்குநர் சினிஷ் தெரிவித்தார்.

இது இப்படி இருக்க, புதிதாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ஜெய். விமல் நடித்த "எத்தன்" படத்தை இயக்கியவர் சுரேஷ். இவர்தான் அடுத்து ஜெய்யை வைத்து இயக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தைப் பற்றிய சுவையான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் ஜெய்க்கு கேத்ரின் தெரஸா, வரலட்சுமி சரத்குமார், ராய் லட்சுமி என மூன்று ஹீரோயின்களாம்.

பாம்புகள் பழி வாங்கும் கதையை தமிழ் சினிமாக்களில் அவ்வப்போது நாம் பார்த்திருப்போம். அந்த வகையில் 1979 ம் ஆண்டு கமல்ஹாசன், ஸ்ரீபிரியா நடித்த படம் நீயா. இதில் பழி வாங்கும் பாம்பாக ஸ்ரீபிரியா நடித்திருப்பார். கிட்டத்தட்ட 39 வருடங்களுக்குப் பிறகு நீயா பட பாணியில் இயக்குநர் சுரேஷ் ஒரு படம் இயக்குகிறார். இந்தப் படத்திற்கு நீயா 2 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது நீயா படத்தின் தொடர்ச்சியா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

இதில் ஜெய் ஐடி ஊழியராக நடிக்கிறார். இதற்கான ப்ரி புரொடக்சன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. மேலும், சென்னை மதுரை கேரளா போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கப் போவதாகவும் படத்தின் ஷுட்டிங் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்றும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்