தமிழ் ராக்கர்சில்,  கடந்த வாரம் வெளியான 'கழுகு 2 '  மற்றும் 'ஜாக்பாட்' ஆகிய படங்கள் வெளியாகி படக்குழுவிற்கு அதிர்ச்சி  கொடுத்துள்ளது.

நடிகை பிந்து மாதவி மற்றும் கிருஷ்ணா நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கழுகு.  இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவு கிடைத்ததை தொடர்ந்து,  இந்த படத்தின் இரண்டாம் பாகம்  எடுக்கப்பட்டது.

'கழுகு 2 ' என்கிற பெயரில் கடந்த வாரம் வெளியான இந்த படத்திற்கு,  ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவிற்கு, வரவேற்பு கிடைக்கவில்லை. முதல்  பாகத்தை விட இரண்டாவது பாகத்திற்கு கலவையான விமர்சனங்கள் மட்டுமே கிடைத்து வருகிறது.

மேலும் ரசிகர்கள் ஒரு சிலர்,  முதல் பாகத்துடன் இரண்டாவது பாகத்தை ஒப்பிட்டு, சுட்டிக்காட்டி சில அதிருப்திகளை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.  இந்நிலையில் இந்த படத்தை, தமிழ் ராக்கர்ஸ், சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு உள்ளது, கழுகு பட குழுவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

'ஜாக்பாட்'

அதை போல் வரிசையாக ஹிட் படங்களை கொடுத்து வரும் ஜோதிகா,  ரேவதியுடன் இணைந்து நடித்துள்ள 'ஜாக்பாட்' திரைப்படமும் தமிழ் ராக்கர்ஸ் வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

ஆக்ஷன் - காமெடியை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.  மேலும் யோகி பாபு , மொட்டை ராஜேந்திரன் மற்றும் ஆனந்தராஜன் காமெடியும் இப்படத்துக்கு படத்திற்கு வலு சேர்த்துள்ளது.

படம் வெளியாகி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில் தொடர்ந்து ஜாக்பார்ட் திரைப்படம் தமிழ் ராக்கர்சில் வெளியாகியுள்ளதால் கடும் அப்செட்டில் இருக்கிறாராம் ஜோதிகா.