இசைவாணியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஐக்கி பெர்ரி, அங்கிருந்து இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 50 நாட்களை கடந்து வெற்றிகரமாக நடந்து வரும் இந்நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒரு போட்டியாளர் வெளியேற்றப்படுவது வழக்கம். இணையத்தில் மக்கள் அளிக்கும் வாக்குகளின் அடிப்படையில் இந்த வெளியேற்றுப் படலம் நடக்கும்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

அதன்படி கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து ஐக்கி பெர்ரி வெளியேற்றப்பட்டார். தஞ்சாவூரை சேர்ந்தவரான இவர், ராப் பாடகி ஆவார். இவர் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது இசைவாணி உடன் நெருக்கமாக பழகி வந்தார். இசைவாணியும் ஐக்கி வெளியேறியதற்கு முந்தைய வாரம் வெளியேற்றப்பட்டார்.

கனா பாடகியான இசைவாணி, ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் ஆவார். இன்றளவும் ஓட்டு வீட்டில் தான் வசித்து வருகிறார். இந்நிலையில், இசைவாணியின் வீட்டுக்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த ஐக்கி பெர்ரி, அங்கிருந்து இன்ஸ்டாகிராம் நேரலையில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.

அப்போது இருவரும் தாங்கள் வருங்காலத்தில் இணைந்து இசை ஆல்பம் ஒன்றை உருவாக்க உள்ளதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக பிக்பாஸ் வீட்டிலேயே இருவரும் ஆலோசித்ததாகவும் விரைவில் அதற்கான பணிகள் தொடங்கப்படும் எனவும் கூறினர். மேலும் தங்களுக்கு தொடர்ந்து சப்போர்ட் பண்ணுமாறு அவர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

View post on Instagram