மகத்திற்கு முத்த மழை பொழியும் யாஷிகா ஆனந்த்... பிராச்சி இந்த வீடியோவை பார்த்தால் என்ன ஆகும்...!

காதலர்களிடையேயான நெருக்கத்தை காட்டும் இந்த பாடலில், யாஷிகா - மகத்திற்கும், மகத் - யாஷிகாவிற்கும் மாறி, மாறி முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

Ivan Than Uthaman Nagarathey Lyric Video Released With Mahat and Yashika Romantic Scene

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா ஆனந்த் சக போட்டியாளரான மகத் மீது காதல் வயப்பட்டார். பிக்பாஸ் வீட்டிற்குள் இருவரும் போட்ட ஆட்டம் கொஞ்ச நஞ்சம் கிடையாது. இந்நிலையில் தனக்கு வெளியே காதலி இருப்பதாக மகத் கூற, இருவரும் நண்பர்களாக பழகுவோம் என காதல் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். 

Ivan Than Uthaman Nagarathey Lyric Video Released With Mahat and Yashika Romantic Scene

பிக்பாஸ் வீட்டிற்குள் அளவுக்கு அதிகமாக கோபப்பட்டு கெட்ட பெயர் வாங்கிய மகத், ரெட் கார்டு கொடுக்கப்பட்டு அந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர் மகத், யாஷிகா இடையே எவ்வித தொடர்பும் இல்லை. சமீபத்தில் காதலி பிராச்சியை திருமணம் செய்து கொண்டார் மகத். 

Ivan Than Uthaman Nagarathey Lyric Video Released With Mahat and Yashika Romantic Scene

இந்நிலையில் மகத்தும், யாஷிகாவும் இருவரும் இணைந்து இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்து வருகின்றனர். இரட்டை இயக்குநர்களான மகேஷ், வெங்கடேஷ் இயக்கி வருகின்றனர். முனீஸ்காந்த், மா.க.பா. ஆனந்த், மனோ பாலா, சாரா வெங்கடேஷ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பரத்ன் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். 

Ivan Than Uthaman Nagarathey Lyric Video Released With Mahat and Yashika Romantic Scene

இதையும் படிங்க: ஓடிப்போன கணவர்... உறவுக்கார வாலிபர் உடன் குடித்தனம்... தூக்கில் தொங்கிய துணை நடிகையின் பகீர் வாழ்க்கை

ஹாரர் த்ரில்லர் ஜானரைக் கொண்ட இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், கன்னடம் என இரண்டு மொழிகளில் தயாராகிறது. சமீபத்தில் மகத் பிறந்தநாளை முன்னிட்டு வெளியான இவன் தான் உத்தமன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் செம்ம வைரலானது. இதனிடையே இந்த படத்தில் இருந்து நகராதே பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. 

 

இதையும் படிங்க: சாமியாரிடமிருந்து எஸ்கேப் ஆன நயன்தாரா... எவ்வளவு மிரட்டியும் மசியவே இல்லையாமே..?

இயக்குநர் விக்னேஷ் சிவனின் பாடலை அனிருத் பாடி அசத்தியுள்ளார். லிரிக் வீடியோவுடன் மகத், யாஷிகா ஆனந்த்  குளோஸ் ரொமான்ஸ் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. காதலர்களிடையேயான நெருக்கத்தை காட்டும் இந்த பாடலில், யாஷிகா - மகத்திற்கும், மகத் - யாஷிகாவிற்கும் மாறி, மாறி முத்தம் கொடுப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios