இன்று காலை முதலே... திரையுலகின் முக்கிய பிரபலங்களை ஐடி அதிகாரிகள் சுற்றி வளைத்து ரெய்டு நடத்தி வருவதால், தமிழ் திரையுலகமே உச்சகட்ட பதற்றத்தில் உள்ளது.

தமிழ் கிட்ட தட்ட 20 திற்கும் மேற்பட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய ஏஜிஎஸ் சினிமாஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உள்ள 20 இடங்களில் காலை முதலே, வருமானவரி துறையினர் அதிரடி ரெய்டு நடந்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து, கோபுரம் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் பல படங்களை இயக்கியுள்ள, தயாரிப்பாளரும், சினிமா பைனான்சியருமான அன்புசெழியனின் வீடு மட்டும் அலுவலகத்தில் ஐடி துறையினர் ரெய்டு நடத்தினர். இதனால் தமிழ் திரையுலகமே சற்று பரபரப்பாக காணப்பட்டது.

இந்த பதற்றம் நீங்குவதற்குள், ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்த பிகில் படத்தின் நாயகன் நடிகர் விஜய், திருநெல்வேலில் நடித்து வரும் படப்பிடிப்பு தளத்திலும் அதிரடியாக நுழைந்தனர் ஐடி அதிகாரிகள். 

நடிகர் விஜய்க்கு நேரிலேயே சம்மன் வழங்கிய அவர்கள், அவரிடம் விசாரணை மேற்கொண்டது மட்டும் இன்றி, அவருடைய காரிலேயே விஜய்யை அழைத்து சென்றதால், படப்பிடிப்பு தளமே... பரபரப்பாக மாறியது. 

மேலும் சாலிகிராமத்தில் உள்ள விஜய்யின் வீட்டில்... அவருடைய தந்தை, எஸ்.ஏ.சந்திரசேகரிடமும் ஐடி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

'பிகில்' படம்  சம்மந்தமாக தான் விஜய்க்கு சம்மன் கொடுக்கப்பட்டதாக கூறப்பட்டு வந்த நிலையில்... விஜய்யின் தந்தையிடமும் ஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளது, இந்த ரெய்டு ஏன் நடத்தப்படுகிறது என்கிற கேள்வியை எழுப்பி உள்ளது. இது ஒருபுறம் இருக்க, ஐடி ரெய்டு குறித்து பல்வேறு காரணங்களும் தற்போது சமூக வலைத்தளத்தை வட்டமிட்டு வருகிறது.