தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் , இந்தி மொழி படங்களிலும் நடித்து வெற்றி பெற்றவர் தனுஷ். இவர் நடிப்பில் இந்த தீபாவளிக்கு கொடி படம் திரைக்கு வருகிறது.
அதே போல், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என பல துறைகளிலும் கால் பதித்து சாதனை செய்து வருகிறார்.
சமீபத்தில் இவரின் மனைவி ஐஸ்வர்யா தனுஷும் இயக்குனர்ராக களம் இறங்கி, திரைத்துறையில் கலக்கி வருகிறார்.
இந்நிலையில் இவர் தமிழகத்தின் முன்னணி வார இதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார்.
இதில் ‘தனுஷ் குறித்து நிறைய காதல் கிசுகிசு வருகிறதே' என செய்தியாளர்கள் கேட்டுள்ளனர், அதற்கு பதில் கொடுத்துள்ள அவர் ‘இதற்கு நான் ஒரு டாக்டர் அல்லது வக்கீலாக இருந்தால் கோபப்படலாம்.
நான் சிறு வயதில் இருந்து இந்த சினிமாவில் மட்டும் தான் இருக்கிறேன், அதனால் எனக்கு தெரியும் என் கணவரை எப்படி என்று.
மேலும் அப்பா குறித்து கிசுகிசு வந்த போது அம்மா எப்படி எடுத்துக்கொண்டார்களோ, அப்படித்தான் நானும் எடுத்துக்கொள்வேன்’ என கூறியுள்ளார்.
