நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், 'கலக்கப் போவது யாரு' நிகழ்ச்சியின் மூலம் ஒரு சாதாரண தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகம் ஆகி, பின் நடன நிகழ்ச்சி, இரண்டாவது ஹீரோயின் என பல்வேறு போராட்டங்களுக்குப் பின்னர் தன்னை ஒரு நடிகையாக திரையுலகில் நிலை நிறுத்திக்கொண்டவர்.

எந்த ஒரு நடிப்பு பாரம்பரியப் பின்னணியும் இல்லாமல் திரையுலகிற்கு இவர் வந்தாலும், இவர் தேர்ந்தெடுத்து நடித்த கதைகள் இவரை முன்னணி நடிகையர் பட்டியலில் தற்போது இடம் பிடிக்கவைத்துள்ளது.

தான் நடிக்க வேண்டும் என, இவர் முடிவெடுத்தபோது... வாய்ப்புகள் தேடி பல இயக்குனர்களிடம் ஆடிஷன் சென்றார். ஆனால் இவர் சென்ற இடங்களில் எல்லாம் இவருக்கு பரிசாகக் கிடைத்தது என்னவோ அவமானங்கள்தான். இவரை கேவலப்படுத்திய பல முன்னணி இயக்குனர்களும் இருக்கின்றனர்.

தன்னுடைய கதைத் தேர்வுகள் மூலம் வெற்றி பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கும் 'வடசென்னை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மேலும் தமிழ் மட்டும் இன்றி இவர் மலையாளத்திலும் முன்னணி நடிகர் நிவின் பாலிக்கு ஜோடியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.