தமிழ்நாட்டில் தற்போது நிலவி வரும் அரசியல் சூழலை கண்டு பல பிரபலங்களும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்து வருகின்றனர்.

இதே போல தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்துவரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்... தன்னுடைய உருக்கமான கருத்தை வெளியிட்டுள்ளார். உண்மையில் இவருடைய கருத்து பலரையயும் யோசிக்கவைத்துள்ளது.

அவர் கூறியுள்ளது முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவின் மறைவு பலரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது என்பது மறுக்க முடியாத உண்மை மேலும் அவர் மீது உண்மையான அன்பு வைத்திருக்கும் பலர் இன்றுவரை அவருடைய  இறப்பில் மர்மம் இருப்பதாக கூறிவருகின்றனர்.

தற்போது தமிழ்நாட்டில் நிலவும் அரசியல் சூழலும்  மக்களிடையே சில அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் கமல் ஹாசன் போன்ற நடிகர்கள் சிலர் முதல்வர் ஓ.பி.எஸ் க்கு ஆதரவாக தங்களது கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் .

ஆனால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஸ் சற்று வித்தியாசமாக அம்மாவை இப்போது தான் நான் மிகவும் மிஸ் செய்கிறேன் என கூறியுள்ளார். அவர் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்திருக்குமா.... தற்போது  தமிழ்நாட்டை இப்படி பார்க்க முடியவில்லை என்று வேதனையோடு உருக்கமாக டுவிட் செய்துள்ளார்.