தற்போது "மாஸ்டர்" படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பர் அப்டேட் தளபதி பேன்ஸை குஷியாக்கியுள்ளது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துவிட்டார். கைதி, மாநகரம் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி, சூப்பர் ஹிட் கொடுத்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உடன் விஜய் கூட்டணி அமைத்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்தப்படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோகனனும், வில்லனாக 'மக்கள் செல்வன்' விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர். ஆன்ட்ரியா, '96' புகழ் கவுரி கிஷான், மலையாள நடிகை லிண்டு ரோணி, வி.ஜே.ரம்யா என அழகு தேவதைகளும், சேத்தன், சஞ்சீவ், பிரேம், ஸ்ரீநாத், சாந்தனு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையும் படிங்க: அவசர அவசரமாக மருத்துவமனைக்குச் சென்ற அஜித், ஷாலினி... காரணம் இதுவா?

கொரோனா பிரச்சனை மட்டும் இல்லை என்றால் மாஸ்டர் திரைப்படம் ஏப்ரல் 9ம் தேதியே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டியது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே மாஸ்டர் திரைப்படம் தீபாவளி அன்று அதாவது நவம்பர் 14ம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. அனிருத் இசையில் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.குறிப்பாக தளபதி விஜய் மாஸ் ஸ்டெப் போட்ட வாத்தி கம்மிங் பாடல் டிக்-டாக்கில் செம்ம பிரபலம். பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் பலரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு டிக்-டாக்கில் நடனமாடி அசத்தி வருகின்றனர். 

இதையும் படிங்க: “பிகில்” இந்திரஜாவிடம் அத்துமீறிய ரசிகர்... நெத்தியடி பதிலால் தெறித்து ஓட்டம்...!

தற்போது "மாஸ்டர்" படம் குறித்து வெளியாகியுள்ள சூப்பர் அப்டேட் தளபதி பேன்ஸை குஷியாக்கியுள்ளது. படத்தின் இறுதிக்கட்ட போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்ட நிலையில், மாஸ்டர் படத்தை சென்சார் போர்டுக்கு அனுப்பிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் யு/ஏ சர்டிபிகேட் கொடுத்துள்ளார்களாம். அதேபோல் படத்தின் மொத்த ரன்னிங் டைம் 165 நிமிடங்கள் என்று கூறப்படுகிறது. இப்படி அடுத்தடுத்து தகவலை மட்டுமே கேட்டு சந்தோஷப்படும் விஜய் ரசிகர்கள், ‘வெயிட்டிங்கிலேயே வெறி ஏறுது’ தியேட்டர் திறந்ததும் படத்தை சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க என கோரிக்கை வைத்துள்ளனர்.