Asianet News Tamil

காதலியுடன் ராணாவுக்கு ரகசியமாக முடிந்த நிச்சயதார்த்தம்?.... உண்மையை போட்டுடைத்த நடிகரின் அப்பா....!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு ராணா, மிஹீகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகின.

Is this True Actor Rana Daggubati Gets Engaged to Mikeeha Bajaj
Author
Chennai, First Published May 21, 2020, 12:39 PM IST
  • Facebook
  • Twitter
  • Whatsapp

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் தரமான கதைகளை மட்டுமே தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் ராணா. கடந்த 2010 ஆம் ஆண்டு, லீடர் என்கிற திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படத்திலேயே சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம் பேர் விருது இவருக்கு கிடைத்தது. 

இதையும் படிங்க: இந்த நடிகையால் மட்டும் எப்படி?... புடவையில் கூட தினுசு, தினுசாக கவர்ச்சி காட்டும் அர்ச்சனா குப்தா!

இந்த படத்தை தொடர்ந்து, ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்த துவங்கினார். அந்த வகையில் இவர் தமிழில், தல அஜித் நடித்த 'ஆரம்பம்' படத்தில் மிலிட்டரி ஆபீஸராகவும், அஜித்தின் நண்பராகவும் நடித்திருந்தார்.இயக்குனர் எஸ்.எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில், வெளியான பாகுபலி படத்தில், பல்வாள் தேவனாக மிரட்டி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றார். 

நடிகர் என்பதையும் தாண்டி, பட தயாரிப்பாளர், விஷ்வல் எபெக்ட்  சூப்பர்வைசர், தொகுப்பாளர், விநியோகஸ்தர் என திரையுலகில் தன்னுடைய திறமையை நிரூபித்து வருகிறார்.பல ஆண்டுகளாக மிரட்டு சிங்கிளாக சுற்றி வந்த ராணா, தொழிலதிபரும், மாடலுமான மிஹீகா பஜாஜ் என்பவரை காதலித்து வந்தார். சமீபத்தில் ராணா காதலை சொல்ல மிஹீகாவும் உடனடியாக ஓ.கே. சொல்லிவிட்டார். இதையடுத்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலானது. 

இதையும் படிங்க: டிரஸ் போட்டிருக்கீங்களா?... பிரபல தொகுப்பாளினி டிடி-யின் போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்...!

தற்போது இந்தியாவையே ஆட்டி படைக்கும் கொரோனா பிரச்சனை காரணமாக மே 31ம் தேதி வரை லாக்டவுன் விதிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட பிறகு ராணா, மிஹீகாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற உள்ளதாக கூறப்பட்ட நிலையில், நேற்று இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்து முடிந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ராணாவின் தந்தையும் சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ் விளக்கம் அளித்துள்ளார். 

இதையும் படிங்க:  மீண்டும் வெளியானது ஆன்ட்ரியா லிப் லாக் காட்சி.... தீயாய் பரவும் வீடியோ...!

ராணா குடும்ப வழக்கப்படி பெண் வீட்டார், மாப்பிள்ளை வீட்டிற்கு வந்து சந்தித்து பேசுவார்களாம். அதற்காக தான் இருவரும் தங்களது வீட்டிற்கு வந்ததாகவும், நிச்சயதார்த்தம் எல்லாம் நடக்கவில்லை என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார். அதேபோல் நிச்சயதார்த்தம் மற்றும் திருமண தேதியை இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், டிசம்பர் மாதத்தில் திருமணத்தை நடத்தலாம் என்று திட்டமிட்டு வருவதாகவும் ராணாவின் அப்பா தெரிவித்துள்ளார். 

Follow Us:
Download App:
  • android
  • ios