மார்க் ஆண்டனி கேரக்டரில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் மிரட்டியிருப்பார் ரகுவரன்.

சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் 1995-ம் ஆண்டு வெளியான பாட்ஷா படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. அதன்பிறகு வெளியான பல படங்களில் பாட்ஷா படத்தின் சாயலை பார்க்க முடியும். ரஜினிக்கு டஃப் கொடுத்த வில்லன் கதாப்பாத்திரங்களில் முக்கியமானது மார்க் ஆண்டனி கேரக்டர். இந்த கேரக்டரில் தனது அசத்தலான நடிப்பின் மூலம் மிரட்டியிருப்பார் ரகுவரன். மேலும் ரஜினியும் ரகுவரனும் நெருங்கிய நண்பர்களாகவே இருந்தனர்.ரகுவரனுக்கு அஞ்சலி படத்திற்கு பிறகு பெரிதாக வாய்ப்பு கிடைக்காத சூழலில், அவருக்கு பாட்ஷா படத்தில் நடிக்கும் வாய்ப்பு கொடுத்து அவரை தூக்கிவிட்டதே ரஜினி தான் என்று கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து ரஜினியும் ரகுவரனும் பல படங்களில் இணைந்து நடித்திருப்பார்கள். முத்து, அருணாச்சலம் போன்ற ஹிட் படங்களில் ரஜினியும் ரகுவரனும் இணைந்து நடித்தனர். மேலும் ரஜினியின் சிவாஜி படத்திலும் ரகுவரன் நடித்திருப்பார்.

வில்லன், குணச்சித்திர நடிகர் என எந்த கேரக்டராக இருந்தாலும் தனது திறமையை வெளிப்படுத்தி ரசிகர்கள் மத்தியில் தனக்கென தனி இடத்தை பிடித்தார் ரகுவரன். குறிப்பாக வில்லனாக நடிக்க ரகுவரனுக்கு மாற்றாக யாரும் அமையவில்லை என்பதே உண்மை.

கடந்த 2008-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி தனது 49-வது வயதில் ரகுவரன் காலமானார். நடிகை ரோகிணியை திருமணம் செய்த ரகுவரனுக்கு சாய் ரிஷிவரன் என்ற மகன் இருக்கிறார். அதீத மதுப்பழக்கத்தால் உறுப்புகள் பாதிக்கப்பட்டதே அவரின் இறப்புக்கு காரணம் என்று சொல்லப்படுகிறது.

ஆனால் தனது நெருங்கிய நண்பரான ரகுவரன் இறந்த போது அவரின் இறுதிச்சடங்கில் ரஜினிகாந்த் பங்கேற்கவில்லை என்பது அப்போதே விவாதப் பொருளாக மாறியது. இந்த நிலையில் ரகுவரனின் தாயார் மற்றும் சகோதரர் அதற்கு விளக்கமளித்துள்ளனர். ரகுவரன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருந்த போதே, ரஜினிகாந்த் அவருடன் நீண்ட நேரம் இருந்ததாக அவர்கள் கூறியுள்ளனர். தனது நண்பனை, மகா கலைஞனை இப்படி ஒரு நிலையில் தன்னால் பார்க்க முடியாது என்ற காரணத்தால் தான் ரஜினி ரகுவரனின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளவில்லை என்று ரகுவரனின் தாயார் தெரிவித்துள்ளார்.

அக்கட தேசம் முதல் அமெரிக்கா வரை... ஜெயிலர் ரஜினி ரசிகர்கள் அலப்பறையான கொண்டாட்டங்கள் இதோ