தோனி வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில் நடித்ததன் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களை பெற்றவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத். மும்பை பாந்த்ராவில் உள்ள வீட்டில் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். 34 வயதே ஆன இளம் நடிகரின் இந்த திடீர் முடிவு திரைத்துறையினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. முதற்கட்ட விசாரணையில் சுஷாந்த் கடந்த 6 மாதங்களாக மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும், கடந்த ஒரு மாதமாகவே தந்தை, சகோதரிகள் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் பேசுவதை தவிர்த்து வந்ததாகவும் கூறப்படுகிறது. 

இதையும் படிங்க: லாக்டவுனில் தங்கையுடன் சேர்ந்து அட்ராசிட்டி... வைரலாகும் பிரபல நடிகையின் அசத்தலான யோகா போஸ்...!

இதற்கு முன்னதாக சுஷாந்த் சிங்கிடம் மேனேஜரான பணிபுரிந்து வந்த பெண் மேனேஜர் தற்கொலை செய்து கொண்டு பாலிவுட்டில் அதிர்வலைகளை உருவாக்கியது.  திஷா சலியான் என்ற சுஷாந்தின் முன்னாள் மேனேஜர் ஜூன் 8ம் தேதி மும்பையில் உள்ள 14 மாடி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். கர்நாடகாவைச் சேர்ந்த இவர் மும்பையில் தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். அவருடைய காதலரான ரோஹன் ராய் என்பவருடன் நிச்சயதார்த்தம் முடிவடைந்த நிலையில், இருவரும் ஒன்றாக வசித்து வந்தனர்.

இதையும் படிங்க: ஹாட் பிகினியில் அமலா பால் ... அப்படியொரு போஸில் ரசிகர்களிடம் கேட்ட அதிரடி கேள்வி...!

இந்நிலையில் திஷா தற்கொலை செய்து கொண்ட போது அவருடன் அறையில் இருந்த ரோஹனை போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். ஆனால் இதுவரை திஷா தற்கொலைக்கான காரணம் குறித்து எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை. இந்த சமயத்தில் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டது போலீசாருக்கு சந்தேகத்தை கிளப்பியுள்ளது. இதற்கு முன்னதாக திஷா இறந்த போது போலீசாருக்கு சுஷாந்த் மீது எவ்வித சந்தேகமும் வரவில்லையாம். அதனால் அவரிடம் விசாரணை நடத்தப்படவில்லை. 

இதையும் படிங்க: சின்னத்திரை நயன்தாரா வாணிபோஜன் போட்டோவில் இதை கவனித்தீர்களா?... தீயாய் பரவும் புகைப்படம்...!

இருவருடைய மரணத்திற்கு ஏதாவது தொடர்பு உள்ளதா? என போலீசாரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு போலீசார் இரு வழக்குகளையும் தனித்தனியே விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர். ஆனால் இருவருடைய போன் ரெக்கார்டுகளையும் சோதனை செய்து வருவதாகவும், இருவரும் போனில் ஏதாவது பேசிக்கொண்டார்களா?, எங்காவது சந்தித்து கொண்டார்களா? என தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளனர்.