Asianet News TamilAsianet News Tamil

டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுகிறதா? திருப்பூர் சுப்பிரமணியம் அதிரடி விளக்கம்..!!

கொரோனா பிரச்சனை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக... மற்ற தொழிலாளர்களை விட அதிக நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். இந்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான தகவலுக்கு அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.
 
Is the ticket price being raised? Tirupur Subramaniam say truth
Author
Chennai, First Published Aug 23, 2021, 11:53 AM IST

கொரோனா பிரச்சனை காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக... மற்ற தொழிலாளர்களை விட அதிக நஷ்டத்தை சந்தித்து வருகிறார்கள் திரையரங்க உரிமையாளர்கள். இந்நிலையில் சுமார் 4 மாதங்களுக்கு பின் மீண்டும் திரையரங்குகள் திறக்கப்பட உள்ள நிலையில், டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படுவதாக வெளியான தகவலுக்கு அதிரடி விளக்கம் கொடுத்துள்ளார், திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம்.

Is the ticket price being raised? Tirupur Subramaniam say truth

கொரோனா முதல் அலையின் போது, 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருந்த நிலையில், பின்னர் திறக்கப்பட்டது. எனினும் கொரோனா அச்சம் காரணமாக, பலர் திரையரங்கம் வர அஞ்சினர். தீபாவளிக்கு தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' படம் வெளியான போது, மீண்டும் திரையரங்குகளில் கூட்டம் வர துவங்கியது. அடுத்தடுத்த படங்களும் வெளியாக துவங்கின. ஆனால் திடீர் என தலைதூக்கிய கொரோனா இரண்டாவது அலை காரணமாக, மே மாதம் மீண்டும் அனைத்து  திரையரங்குகளும் மூடப்படும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டது.

Is the ticket price being raised? Tirupur Subramaniam say truth

கொரோனா கடந்த இரண்டு மாதங்களாக கட்டுக்குள் வரவே... அடுத்தடுத்து சில தளர்வுகள் அறிவிக்கப்பட்ட வந்த நிலையில், திரையரங்குகளை திறக்க அனுமதி கொடுக்க வேண்டும் என, கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே, திறையரங்கு உரிமையாளர்கள் கோரிக்கை வைத்து வந்த நிலையில், இன்று முதல் 50 சதவீத பார்வையாளர்களுடன், கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து திரையரங்குகள் செயல்படலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

Is the ticket price being raised? Tirupur Subramaniam say truth

மேலும், திரையரங்க உரிமையாளர்கள் தொடர்ந்து, நஷ்டத்தை சந்தித்து வருவதால், டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவியது. இந்த தகவல் சினிமா ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த நிலையில், இதுகுறித்து தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அதாவது டிக்கெட் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றும், எப்போதும் வாங்கப்படும் கட்டணமே வசூலிக்கப்படும் என, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Is the ticket price being raised? Tirupur Subramaniam say truth

அதே போல் இன்று தமிழகத்தில் சுமார் 40 சதவீத திரையரங்குகள் திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலையில், ஏற்கனவே வெளியாகி வெற்றி பெற்ற ஆங்கில படங்கள், டப்பிங் படங்கள் மற்றும் பழைய தமிழ் படங்கள் திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக வெளியான வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திருப்பூர் சுப்பிரமணியம்.

Follow Us:
Download App:
  • android
  • ios