பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பமான முதல் நாளே பிரபல இலங்கை செய்தி வாசிப்பாளர் லாஸ்லியாவிற்கு ஆர்மி ஆரம்பித்து அதகளம் செய்தனர் பிக்பாஸ் ரசிகர்கள். இதுவரை அதிகமாக அவர் பேசவில்லை என்றாலும், இவர் அவசரப்பட்டு எந்த ஒரு முடிவும் எடுக்காமல், சிந்தித்து செயல்படும் விதம், அனைத்து போட்டியாளர்களையும் கவர்ந்துள்ளது என்றே கூறலாம்.

இவரின் குரலை அதிகம் கேட்ட முடிவதில்லை என்கிற ஒரு குறை இருந்தாலும், கண்டிப்பாக லாஸ்லியா இறுதி போட்டியாளர்களின் ஒருவராக வர வாய்ப்புள்ளதாகவே பலர் கருதுகிறார்கள்.

இவரை பற்றி பாசிட்டிவ் விமர்சனங்கள் தொடர்ந்து வெளியான நிலையில், திடீர் என கடந்த வாரம் லாஸ்லியாவிற்கு திருமணம் ஆகி விவாகரத்து ஆகி விட்டதாக ஒரு தகவல் வைரலாக பரவியது. இது கேட்பவர்களையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில் இதுகுறித்து, லாஸ்லியாவின் தோழிகளிடம் பிரபல ஊடகம் ஒன்று தொடர்பு கொண்டு பேசிய போது, உண்மை என்ன என்பதை கூறியுள்ளனர். இது குறித்து அவர்கள் கூறுகையில், லாஸ்லியா மிகவும் குறும்பு கார பெண். எப்போதும் சிரித்து கொண்டே இருப்பாள். மனதில் என்ன கவலை இருந்தாலும் அதனை வெளிப்படுத்த மாட்டாள்.

அதே போல் தான் இந்த நிகழ்ச்சியிலும் விளையாடி வருகிறார். லாஸ்லியா திருமணம் செய்தி குறித்து பதில் அளித்த அவருடைய தோழிகள். இந்த தகவல் முற்றிலும் வதந்தி. அவரை சிறிய வயதில் இருந்து பார்த்து வருகிறோம். அவளை பற்றி தெரிந்தவர்கள் கண்டிப்பாக இது போன்ற ஒரு தகவலை வெளியிட்டிருக்க மாட்டார்கள். என வதந்திக்கு அதிரடியாக முற்று புள்ளி வைத்துள்ளனர்.