தொடர் தோல்விகளின் எதிரொலியால் தனது அடுத்த படங்கள் நிச்சய வெற்றியை பெற்றே ஆக வேண்டும் எனும் வெறித்தனத்தில் இருக்கிறார் சூர்யா. விளைவு ‘சூரரைப் போற்று!’ படத்திற்காக  பேய்த்தனமாக உழைத்து வருகிறார். இதன் பிறகு பரிச்சார்த்த முயற்சிகள் எதிலும் இறங்காமல் தனது பழைய ஹிட் இயக்குநர்களின் படங்களில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அந்த வரிசையில் ஹரி, கெளதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் இருக்கின்றனர். 

*மல்ட்டி ஸ்டார்ஸ் ப்ராஜெக்ட்களில் அவ்வளவாக சமீப காலத்தில் விஜய் ஆர்வம் காட்டியதில்லை. ஆனால் லோகேஷ் கனகராஜின் கதை கேட்பதால் அதற்கு சம்மதித்துள்ளார். மாஸ் ஹீரோ விஜய் சேதுபதி இதில் விஜய்யின் எதிராளி என்கிறார்கள். இது பெரிய சர்ப்பரைஸ். இவர் போக பாக்யராஜின் மகன் சாந்தனு இந்தப் படத்தில் இருக்கிறார். இது போக, மலையாள நடிகர்  ஆன்டனி  வர்கீஸும் இந்தப் படத்தில் இணைந்துள்ளார். 

*கோலிவுட் படங்களில் பாலிவுட்டின் பிரதான நடிகர்களை எதிர்பார்ப்பது கஷ்டம். ஆனால் ஷங்கர்  விரும்பினால் அது சாத்தியம்தானே! கமல்ஹாசனின் ‘இந்தியன் 2’ படத்தில் அஜய்தேவ்கன் நடிப்பதாக சொல்லி  இருந்தனர். ஆனால் இப்போது அனில்கபூர் இணைந்திருப்பதாக ஷங்கரும், அனிலும் பேசிக்கொண்டிருக்கும் ஒரு போட்டோ சொல்கிறது.

 

*ஒரு மலையே எழுந்து நடிக்க வந்தது போல் பாகுபலியில் ராணாவின் உடற்கட்டு அதிர வைத்தது. ஆனால் அதன் பிறகு ஃபீல்டில் இருந்து காணாமல் போனவர் போல் ஆனார். அவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சை நடந்துள்ளது! என்று ஒரு தகவல் பரவியது. இதை ராணா மறுத்த நிலையில், இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள சுய படமானது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அவ்வளவு மெலிந்து விட்டார்.

*விநோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் இரண்டாவது படத்தின் படப்பிடிப்பு சப்தமில்லாமல் நடந்து வருகிறது. பக்கா ஆக்‌ஷன் காம்போ மூவியான இதில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. ‘என்னை அறிந்தால்! விஸ்வாசம்’ ஆகிய படங்களில் அஜித்துடன் நடித்த அனிகாவே இந்தப் படத்திலும் அவருடன் நடிக்கிறார்.

அதே என்னை அறிந்தால்! போல் அருண் விஜய்யே இதிலும் வில்லன்.விஸ்வாசம், நேர் கொண்டா பார்வை! படங்களின் வரிசையில் இந்தப் படமும் பெண்மையை போற்றும் படமாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் உள்ளதாம்! இந்த ஒன்லைன் தான் தல படத்தின் கான்செப்ட் என்கிறார்கள்.
-