திரை நட்சத்திரங்களின் விவாகரத்து சமீப காலமாக அதிகரித்து வருகிறது. அண்மையில் தனுஷ், சமந்தா ஆகியோர் விவாகரத்து முடிவை அறிவித்த நிலையில், தற்போது மேலும் ஒரு நடிகை அந்த பட்டியலில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நடிகை ஷில்பா ஷெட்டி பாலிவுட் நடிகையாக இருந்தாலும், தமிழில் 'ரோமியோ', மற்றும் விஜய் நடித்த 'குஷி' படத்தில் நடித்துள்ளார். இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு லண்டனை சேர்ந்த ராஜ் குந்த்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். ஐபிஎல் அணியான ராஜஸ்தான் ராயல்ஸின் உரிமையாளர்களில் ஒருவரான ராஜ் குந்த்ரா ஓட்டல்கள், தங்க வர்த்தகம் என பல்வேறு துறைகளில் தொழில் செய்து வருகிறார். இந்த தம்பதியினருக்கு 2 பிள்ளைகள் உள்ளனர்.

சமீபத்தில் மும்பையில் ஆபாச செயலி மூலம் மாடல்களை ஆபாசமாக படம் எடுப்பதாக வெளியான குற்றச்சாட்டின் பேரில் ராஜ் குந்த்ராவை கடந்தாண்டு ஜூலை மாதம் காவல்துறையினர் கைது செய்தனர். ஒரு மாத சிறைவாசத்துக்கு பின் அவர் ஜாமினில் வெளியே வந்தார். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த ஷில்பா ஷெட்டியின் வாழ்க்கையில் இந்த விவகாரம் மிகப்பெரிய பூகம்பத்தையே ஏற்படுத்தியது.
ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் சிக்கி சிறைக்கு சென்ற சமயத்தில் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்து விடுவார்கள் என வெளியான தகவலை ஷில்பா ஷெட்டி மறுத்தார். ஆனால் தற்போது மீண்டும் அதே விவாகரத்து சர்ச்சை கிளம்பி உள்ளது. ஷில்பா ஷெட்டி விவாகரத்து செய்து கொள்ள இருக்கிறார் என்று தகவல் வேகமாக பரவ, அவரது சமீபத்திய நடவடிக்கைகளே காரணம்.

ராஜ்குந்த்ரா தனது பெயரில் உள்ள ரூ.39 கோடி மதிப்புள்ள சொத்துக்களை ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றியுள்ளார். இதுதவிர கிணாரா பீச் அருகில் உள்ள பண்ணை வீட்டையும் அவர் ஷில்பா ஷெட்டியின் பெயருக்கு மாற்றி இருக்கிறார். இருவரும் பிரிந்து போகும் எண்ணத்துடனே இருப்பதால் தான் தற்போது சொத்து பிரிப்பு நடப்பதாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
