AK 61 update : ஏ.கே.61-ல் வில்லனாக நடிக்கிறாரா ஆதி?... அஜித் உடனான சந்திப்பின் பின்னணி இதுதான்
AK 61 update : நடிகர் ஆதி, அஜித்தை சமீபத்தில் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
எச்.வினோத் இயக்கும் ஏ.கே.61 படத்தில் நடிகர் அஜித் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக அசுரன் பட நடிகை மஞ்சு வாரியர் நடிக்க உள்ளார். வங்கிக் கொள்ளையை மையமாக வைத்து தயாராகும் இப்படத்தில் நடிகர் அஜித் வில்லன் மற்றும் ஹீரோ ஆகிய இரண்டு வேடங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது.
ஏ.கே.61 படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. ஜிப்ரான் இசையமைக்க, நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் வேம்புலியாக நடித்து அசத்திய ஜான் கொகேனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ஆதி, அஜித்தை சமீபத்தில் சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன. இதைப்பார்த்த நெட்டிசன்கள் நடிகர் ஆதி ஏ.கே.61 படத்தில் வில்லனாக நடிக்க் ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வேகமாக சமூக வலைதளங்களில் பரவி வந்தன.
இந்நிலையில், இந்த சந்திப்பு குறித்த உண்மையான தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி நடிகர் ஆதிக்கும் நடிகை நிக்கி கல்ராணிக்கும் வருகிற மே 18-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழை நடிகர் அஜித்திடம் கொடுத்தபோது நடிகர் ஆதி எடுத்த புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
இதையும் படியுங்கள்...Simbu : மீண்டும் உடல் எடை கூடிய சிம்பு... லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்