Simbu : மீண்டும் உடல் எடை கூடிய சிம்பு... லேட்டஸ்ட் போட்டோ பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள்
Simbu : லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள சிம்பு, அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் உடல் எடை கூடிய நிலையில் காணப்படுகிறார் சிம்பு.
உடல் எடை அதிகரித்ததன் காரணமாக பட வாய்ப்புகள் இன்றி தவித்து வந்த நடிகர் சிம்பு, கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு போடப்பட்ட சமயத்தில் கடுமையான உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான தோற்றத்துக்கு மாறினார். இந்த மாற்றம் சிம்புவின் சினிமா கெரியரிலும் திருப்புமுனையாக அமைந்தது.
இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்த மாநாடு திரைப்படம் கடந்தாண்டு இறுதியில் திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு பாக்ஸ் ஆபிஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதையடுத்து சிம்பு நடிப்பு வெந்து தணிந்தது காடு திரைப்படம் தயாராகி உள்ளது.
கவுதம் மேனன் இயக்கி உள்ள இப்படத்திற்காக நடிகர் சிம்பு மேலும் 20 கிலோ உடல் எடையை குறைத்து நடித்து இருந்தார். இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் நிறைவடைந்தது. இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.
இதைத்தொடர்ந்து நடிகர் சிம்பு பத்து தல படத்தில் நடிக்க உள்ளார். ஒபிலி என் கிருஷ்ணா இயக்க உள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு கேங்ஸ்டராக நடிக்க உள்ளார். இதற்காக சிம்பு உடல் எடையை சற்று அதிகரிக்க உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது அதனை அவர் செய்துகாட்டி உள்ளார். லண்டனுக்கு சுற்றுலா சென்றுள்ள சிம்பு, அங்கு எடுத்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்களில் உடல் எடை கூடிய நிலையில் காணப்படுகிறார் சிம்பு. அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
இதையும் படியுங்கள்... sivakarthikeyan : சிவகங்கை மக்களுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் செய்த மிகப்பெரிய உதவி... குவியும் பாராட்டுக்கள்