the box office hit

”இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சந்தோஷ்.பி.ஜெயக்குமார் இயக்கியிருக்கும் இந்த திரைப்படத்தில் கெளதம் கார்த்தி ,வைபவி மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த திரைப்படத்தின் தலைப்பே இரட்டை அர்த்தம் உள்ளது என ஆரம்பம் முதல் கடுமையாக விமர்சிக்கப்பட்டது.

அதிலும் இத்திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் இரட்டை அர்த்த வசனங்கள் ,பல்வேறு திரைத்துறை பிரபலங்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனாலும் இந்த திரைப்படம் வசூல் ரீதியாக பார்க்கும் போது ஆச்சரியப்படும் வகையில் வசூலை அள்ளிக்குவித்துக் கொண்டிருக்கிறது.

ரிலீசாகி ஒரு வாரம் நிறைவடைந்திருக்கும் நிலையில் இந்த திரைப்படம் 11.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. மேலும் திரையரங்குகளில் இந்த திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும் தெரிகிறது. மொத்தத்தில் மோசமான விமர்சனங்களுக்கு இடையிலும் ”இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் முரட்டுத்தனமாக வசூல்செய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.