அடல்ட் காமெடி மற்றும் அடல்ட் ஹாரர் படங்களான ’ஹரஹர மகாதேவகி’ மற்றும் ’இருட்டு அறையில் முரட்டுகுத்து’ படங்களை இயக்கிய சந்தோஷ் ஜெயக்குமார், மூன்றாவதாக அவரே இயக்கி, அவரே நடித்துள்ள திரைப்படம் 'இரண்டாம் குத்து'. இந்த படம் 'இருட்டு அறையில் முரட்டு குத்து' படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ளது.

இந்த படத்தில் புதுமுக நடிகை, அக்ரிதி சிங், மீனெல் ஷா, என இரண்டு கதாநாயகிகள் நடித்துள்ளனர். மேலும் மொட்டை ராஜேந்திரன், பிக்பாஸ் டேனியல், ரவி மரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர் ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தின் டீசர் நேற்று வெளியாகியது.

நாயகிகளை விடாமல் துரத்தி, இரட்டை அர்த்த வசனங்களை பேச வைத்துள்ளார் இயக்குனர். மேலும் லிப் கிஸ், பெட் சீன், ஏ காமெடி, ஆபாச காட்சிகள் என எதற்கும் பஞ்சம் வைக்காமல், இருட்டு அறையை மிஞ்சிய படி படத்தை இயக்கி, அதில் நடித்துள்ளார் சந்தோஷ்.

படத்தின் போஸ்டருக்கு எப்படி நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்தார்களோ அதே போல் இந்த படத்தின் டீஸருக்கும் பலத்த விமர்சனங்கள் எழுந்து வருகிறது. குறிப்பாக இயக்குனர் பாரதி ராஜா இந்த படத்தை இயக்கியவர் வீட்டில் பெண்களே இல்லையா என விளாசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி கடுமையான விமர்சனங்களை சந்தித்துள்ள இந்த டீசரை 12 மணிநேரத்தில் சுமார் 5 லட்சம் பார்வையாளர்கள் பார்த்துள்ளனர். நல்லதை சொன்னால் நாலு பேர் கூட காது கொடுத்து கேர்க்குறது இல்ல, ஆனால் ஆபாசத்தின் உச்சமான இந்த டீசருக்கு இப்படி ஒரு வரவேற்பு...? கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் வேலைகள் முடிந்து எ சர்டிபிகேட் கிடைத்துள்ளதாகவும், படம் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 14 ஆம் தேதி வெளியாக உள்ளதாக இயக்குனர் சந்தோஷ் ஜெயப்ரகாஷ் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். படத்திற்கு எப்படி பட்ட எதிர்ப்புகள் வரும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.