நேற்று இயக்குனர் சந்தோஷ் ஜெயப்ரகாஷ் இயக்கி, அவரே நடித்துள்ள 'இரண்டாம் குத்து படத்தின் டீசர் வெளியாகி, சமூக வலைத்தளத்தில் பல்வேறு விமர்சனங்களை பெற்று வருகிறது. இயக்குனர் பாரதி ராஜா முதல் பலர் இந்த படத்தையும், இப்படி ஒரு ஆபாச படத்தை இயக்கிய இயக்குனரையும் கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இந்நிலையில், இப்படி தாறு மாறாக பறந்த விமர்சனங்களுக்கு, இயக்குனர் சந்தோஷ், ஊடகம் ஒன்றின் மூலம் பதில் கொடுத்துள்ளார். மேலும் இரண்டாம் குத்து படத்தை பற்றியும் பேசியுள்ளார்.

ஏற்கனவே வெளியான தன்னுடைய இரண்டு படங்களுக்கும் ஆதரவு கிடைத்தது. அதே போல் என்னுடைய படத்தை பார்த்து புரிந்து கொள்ளும் அறிவு உள்ளவர்கள் மட்டும் இந்த படத்தை பார்த்தல் போதும் என பேசினார். ஒரு நபர் இந்த மாதிரியான படங்கள் கலாச்சார சீரழிவு எனறும், இதுபோன்று படமெடுத்த இயக்குனரை செருப்பால் அடிக்க வேண்டும் பொம்பளை பொருக்கி என கேவலமாக திட்டியதற்கும் பதில் அளித்துள்ளார்.

இது குறித்து மிகவும் கூலாக, "கலாச்சாரம் என்பது என்ன, நம்ப ஊருல கிளப் இருக்கு, பப் இருக்கு, வைன் ஷாப் இருக்கு, பீச், பார்க் என எல்லாமே இருக்கு.

எல்லோரும் எல்லா இடத்துக்கும் போய்கிட்டு தான் இருக்காங்க. நாம கலாச்சாரமா இருக்க வேண்டும் என்றால், பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர கூடாது. 6 மணிக்கு மேல வெளியே போக கூடாது... இடுப்புக்கு கீழ பேண்ட் போடா கூடாது, இடுப்பு தெரியும் படி புடவை கட்ட கூடாது அப்படினு பார்த்தல் இது எல்லாமே கலாச்சாரம் தான் அதெல்லாம் இப்போ பாலோ பண்றங்களா? என அந்த கேள்வியை எழுப்பிய நபருக்கே பதில் கேள்வி கேட்டுள்ளார்.