ஒலிம்பியாட் விழாவிற்கு ரஜினிகாந்த், கமல், விஜய், அஜித்-க்கு அழைப்பு !
ஒலிம்பியாட் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதல்முறையாக ஒலிம்பியாட் போட்டி நடைபெறவுள்ளது. வரும் 28ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10 தேதி வரை இந்த போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் 187 நாடுகளை சேர்ந்த 2000க்கும் அதிகமான போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.
இதையொட்டு காஞ்சிபுரத்தில் ஒலிம்பியாட் ஜோதி ஓட்டம் நடைபெற்றது. ஒலிம்பியாட் விழாவை துவக்கி வைக்க பிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சென்னை வருகை தர உள்ளார். அதோடு பங்கேற்கும் வீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வருகை காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை கோரப்பட்டது. வரும் 28 /7 /2022 அன்று ஒரு நாள் மட்டும் அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்குமாறு முதன்மை செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையில் குறிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது .
மேலும் செய்திகளுக்கு...”புதுசா மாடு வாங்கி இருக்கோம்”… புது கார் வாங்கியதை வித்தியாசமாக சொன்ன பாலாஜி முருகதாஸ்!!
இதையடுத்து நாளை வியாழக்கிழமை அன்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களுக்கு மட்டும் நாளை (வியாழக்கிழமை) அன்றுஅத்தியாவசிய சேவைகள் வழங்கும் அரசுத்துறைகளை தவிர்த்து மற்ற அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து அரசு ஆணை வெளியிடப்பட்டது. அந்த குறிப்பில் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நான்காவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு...மீண்டும் சட்ட சிக்கலில் ஜெய்பீம் இயக்குனர்...சரவணபவன் ராஜகோபாலின் வழக்கறிஞர் எச்சரிக்கை!
அதோடு பிரதமர் மோடி வருகையொட்டி வியாழக்கிழமை சென்னையை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இந்நிலைகள் போட்டியில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்ள நடிகர்கள் ரஜினிகாந்த், கமலஹாசன், விஜய், அஜித் உள்ளிட்ட பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆல் இந்தியா செஸ் அசோசியேசன் மற்றும் தமிழக அரசு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு... தளபதி விஜய்யின் 'வாரிசு' படத்தில் எஸ்.ஜே.சூர்யா.. என்ன ரோலில் தெரியுமா?
முன்னதாக ஒலிம்பியாட் போட்டி நினைவாக கூவம் ஆற்றின் மீது கட்டப்பட்ட புகழ்பெற்ற நேப்பியர் பாலத்தின் செஸ் போர்டு போன்ற வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தில் நின்றபடி இசையமைப்பாளர் வெல்கம் டூ நம்ம ஊரு சென்னை என்னும் பாடம் வீடியோ வெளியிட்டிருந்தார். மெட்ராஸ் பல்கலைக்கழகத்தையும் தீவு மைதானத்தையும் இணைக்கும் பாலம் சென்னையின் புகழ்பெற்ற அடையாளமாகும். இந்த பாலம் தற்போது செல்பீ ஸ்பாட்டாக மாறியுள்ளது.