Interview Director K.Balachandar with Rajinikanth

ரஜினியை எவ்வளவோ பெரிய ஜர்னலிஸ்டுகள் பேட்டி எடுத்திருக்கிறார்கள். ஆனால் அவர் மிகப் பெருமையாக நினைப்பது தனது குருநாதர் கே.பாலசந்தர் தன்னை ஒரு விழாவில் பேட்டி எடுத்ததுதான். 2011-ல் நடந்த விழாவில் எடுக்கப்பட்டது. 

அதன் ஹைலைட்ஸ்:

பாலசந்தர்: நீ மறுபடியும் சிவாஜிராவ் ஆக முடியுமா?

ரஜினி : நான் சிவாஜிராவா இப்பவும் இருக்கப்போதான், ரஜினிகாந்தா இருக்கேன்.

பாலசந்தர்: சூப்பர் ஸ்டாராக இருக்கும் நீ அதற்கு கொடுக்கும் விலை என்ன?

ரஜினி : இப்படி இருக்குறதுல எனக்கு வருத்தம் உண்டு. என்னோட நிம்மதி, சந்தோஷத்தை நான் ரொம்ப பலி கொடுத்துட்டு இருக்கேன்.

பாலசந்தர்: உனக்கு கடவுள் அந்தஸ்து கொடுத்த தமிழ் சினிமாவுக்கு என்ன பண்ணுவ?

ரஜினி: தமிழர்கள், தமிழ் சினிமா பெருமை படுற அளவுக்கு ஏதாவது பண்ணுவேன்.

பாலசந்தர்: நீ பண்ணாம விட்டுட்டு, வருத்தப்பட்ட படங்கள்.

ரஜினி: நிச்சயமா ஒண்ணு ரெண்டு இருக்குது. ஆனா அதன் பெயரை சொல்ல விரும்பல.

பாலசந்தர்: அமிதாபச்சன் செய்த ‘சீனிகம்’ மாதிரி நீ ஏன் படம் பண்றதில்லை?

ரஜினி: நான் எப்பவும் நடிகனான என்னுடைய சந்தோஷத்துக்கு படம் பண்ண விரும்புறதில்லை. கமர்ஷியலாதான் பண்ன விரும்புறேன்.

பாலசந்தர்: எப்போ நீ தேசிய விருது வாங்கப்போற? நீ அந்த விருதை இன்னும் வாங்கலையேன்னு எனக்கு வருத்தமா இருக்குது.

ரஜினி : எனக்கும் அந்த ஆசை இருக்குது. ஆனா அப்படியொரு விருதை என்னை வாங்க வைக்கிறது உங்களை மாதிரி இயக்குநர்கள் கையிலதான் இருக்குது.