இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, பகத் பாசில், சமந்தா, ராமயா கிருஷ்ணா, காயத்திரி உள்ளிட்ட பலரது  நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'சூப்பர் டீலக்ஸ்'.

இன்று வெளியான இந்த படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் விமர்சனத்தை சர்வதேச ஊடகமான நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டுள்ளது.

இதில் "இயக்குனர் தியாகராஜன் குமாரராஜாவை வெகுவாக பாராட்டிய நியூயார்க் டைம்ஸ், சமந்தாவின் நடிப்பையும் அவரது கேரக்டரையும் கோடிட்டி காட்டி பாராட்டு தெரிவித்துள்ளது". விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்பட பலர் இந்த படத்தில் பிரமாதமாக நடித்திருந்தபோதிலும் சமந்தா இந்த கேரக்டரை துணிச்சலாக ஏற்று நடித்ததற்கு பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.