இன்ஸ்டாகிராம் பிரபலம் தூக்கிட்டு தற்கொலை - அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சரும் முன்னாள் ரேடியோ ஜாக்கியுமான சிம்ரன் சிங், குருகிராமில் உள்ள அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். 

Instagram Influencer Simran Singh Found Dead at Gurugram Home gan

முன்னாள் ரேடியோ ஜாக்கியும் பிரபல இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளுயன்சருமான சிம்ரன் சிங் தற்கொலை செய்து இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடல் குருகிராமில் உள்ள அவரது வீட்டில் கண்டெடுக்கப்பட்டது. சிம்ரன் ஜம்முவைச் சேர்ந்தவர். இன்ஸ்டாகிராமில் அவருக்கு 6 லட்சத்திற்கும் மேற்பட்ட பாலோவர்கள் உள்ளனர். புதன்கிழமை அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். சிம்ரனின் வீட்டின் கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்ததால் அவரது தோழி ஒருவர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசாருக்கு எந்த தற்கொலைக் குறிப்பும் கிடைக்கவில்லை. பிரேத பரிசோதனைக்குப் பிறகு சிம்ரனின் உடல் அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. டிசம்பர் 13 அன்று அவர் இன்ஸ்டாகிராமில் கடைசியாக போட்ட பதிவில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டிருந்தார். அதில், "முடிவில்லாத சிரிப்புடனும் கடற்கரையில் கவுனுடனும் ஒரு பெண்" என. சிம்ரன் இன்ஸ்டாகிராமில் தனது வீடியோக்களை தொடர்ந்து பதிவிட்டு இருந்தார்.

இதையும் படியுங்கள்... கால்ஷீட் கொடுத்தாலும் கமல், ரஜினியுடன் படம் பண்ண மாட்டேன் - இயக்குனர் பாலா பளீச் பதில்

Instagram Influencer Simran Singh Found Dead at Gurugram Home gan

முன்பு பிரபலமான ஆர்ஜேவாக இருந்த சிம்ரன், தற்போது ஃப்ரீலான்சிங் செய்து வந்தார். குருகிராம் சதர் காவல் நிலைய விசாரணை அதிகாரி ஏஎஸ்ஐ பிரதீப் குமார் சிம்ரன் தற்கொலை குறித்து கூறுகையில், சிம்ரன் கடந்த சில காலமாகவே பிரச்சனைகளில் சிக்கித் தவித்ததாக குடும்பத்தினர் தெரிவித்தனர். இதனால்தான் அவர் இந்த முடிவை எடுத்திருக்கலாம். குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை என தெரிவித்தார்.

ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்பரன்ஸ் (JKNC) தலைவர் பரூக் அப்துல்லாவும் ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லாவும் சிம்ரன் சிங்கின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த துயரமான நேரத்தில் சிம்ரனின் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எண்ணற்ற ரசிகர்களுக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இறந்த ஆத்மா சாந்தியடையவும், அவரது உறவினர்கள் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளவும் பிரார்த்திக்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

இதையும் படியுங்கள்... என்னை கல்யாணம் பண்ணிப்பியா? பிக் பாஸ் பிரபலத்திடம் லவ் புரபோஸ் பண்ணிய செளந்தர்யா

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios