'இனியா' சீரியல் ஹீரோ ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள 'பியூட்டி'..!

நீண்ட நாட்களாக சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் தலை காட்டாமல் இருந்த, ரிஷி கதாநாயகனாக நடித்துள்ள 'பியூட்டி' படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 
 

iniya seriyal hero rishi turn to hero

“பியூட்டி” என்ற பெயருக்குப் பொருத்தமாகத் தஞ்சாவூரின் அழகான இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள், வயல்வெளிகள், ஆறுகளில் படமாக்கப்பட்டுள்ளது இந்த படம். சென்னையிலும் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியிலுள்ள பூந்தோட்டங்களில் மட்டுமல்லாமல் அங்குள்ள இரயில்வே நிலையம், விதம்விதமான கள்ளிச் செடிகள் மட்டுமே உள்ள சில இடங்களில் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனர்.

iniya seriyal hero rishi turn to hero

தான் நினைப்பது மட்டுமே சரி என்று, எதிர்மறை எண்ணத்துடன் தவறாகவே வாழும் ஒரு மனிதனைச் சந்தித்த பொழுது அதிர்ந்து, அந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல், அவர் கதையையே ‘சைக்கலாஜிகல் லவ் த்ரில்’லராக, கார் – பைக் சேஸிங் மற்றும் சண்டைக் காட்சிகளுடன் பரபரப்பான திரைக்கதையுடன் “பியூட்டி”யை படமாக்கியிருப்பதாகச் சொல்கிறார் பத்திரிகை துறையிலிருந்து சினிமாவுக்கு வந்திருக்கும் இயக்குநர் கோ.ஆனந்த சிவா... 

Samantha: மயோசிட்டிஸ் பிரச்சனையால்... கனவு வாய்ப்புகளை இழந்த நடிகை சமந்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

iniya seriyal hero rishi turn to hero

இந்த படத்தில் ரிஷி கதாநாயகனாக நடித்துள்ளார்  கரீனா ஷா ஹீரோயினாக நடித்துள்ளார். சிங்கமுத்து, ஆதேஷ் பாலா, மனநல மருத்துவர் ஆனந்தன், சண்முகம் ஆகியோர் நடித்துள்ளனர். “பியூட்டி” படத்தை ஆர்.தீபக் குமார் ஒளிப்பதிவு செய்து, தயாரித்துள்ளார். இலக்கியன் இசையில், வெ.இறையன்பு I.A.S அவர்கள் எழுதியுள்ள இரண்டு பாடல்களை இப்படத்திற்கு எழுதியுள்ளதாக கூறப்படுகிறது. அனைத்து படப்பிடிப்பு பணிகளும் நிறைவடைந்த நிலையில், விரைவில் இந்த படம் குறித்த டீசர், ட்ரைலர் வெளியீடு மற்றும் ரிலீஸ் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

திருமணமான 6 மாதத்தில் தாலியை கழட்டிய நயன்! பட புரோமோஷனுக்கு வெறும் கழுத்தோடு வந்த லேடி சூப்பர்ஸ்டார்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios