Information about Rajmaulis next film Double hero image ...

ராஜமௌலியின் அடுத்த படம் பற்றி தகவல் ஒன்று கசிந்துள்ளது. அது டபுள் ஹீரோ கான்சப்டில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் வைத்து எடுக்கப்போகிறாராம்.

பாகுபலி மற்றும் பாகுபலி-2 படங்களைத் தொடர்ந்து ராஜமௌலியின் அடுத்த படம் என்ன? என்று அனைவரும் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் ராஜமௌலி, ராம்சரணை வைத்து 2019-ல் படம் எடுக்கப் போவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

அது தவிர, வேறு ஒரு படமும் எடுக்க இருக்கிறாராம். ஆனால், தற்போது இவரின் புதிய படத்தில் படப்பிடிப்பை வரும் ஜனவரியில் தொடங்க உள்ளார்.

இரட்டை கதாநாயகன் படமாக உருவாக உள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு இரண்டு மொழியிலும் தயாராகும்.

இந்த படத்தில் ராம் சரண், ஜுனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளனர். கன்னட நடிகர் சுதீப்பும் இதில் நடிக்க உள்ளார்.

இந்தப் படம் பாகுபலி. மாவீரன் போன்று வரலாற்றுப் படமாக இருக்கலாம்.