2018 Not In Oscar Race : பிரபல மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற 2018 திரைப்படம் ஆஸ்கர் விருதிற்கு அனுப்பப்பட்டது அனைவரும் அறிந்ததே.
பிரபல மலையாள இயக்குனர் அந்தோணி ஜோசப் இயக்கத்தில் வெளியான "2018" திரைப்படம் இந்த ஆண்டுக்கான சிறந்த வெளிநாட்டு திரைப்படங்கள் பிரிவில் போட்டியிடுவதற்காக இந்திய அரசால் தேர்வு செய்யப்பட்ட திரைப்படம் என்பது அனைவரும் அறிந்தது. மேலும் இந்த படம் ஆஸ்கார் விருதுகளில் போட்டியிடவும் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
கடந்த 2022ம் ஆண்டு இந்தியா சார்பில் ஆஸ்கார் விருதுக்கு அனுப்பப்பட்ட குஜராத்தி மொழி படமான செல்லோ ஷோ என்ற படம் நாமினேஷன் என்ற அளவுக்கு கூட செல்லாமல் வெளியேறியது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் இந்திய படங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராஜமௌலியின் RRR படத்திற்கும் தி எலிபன்ட் விஸ்பரர்ஸ் படங்களுக்கு விருது கிடைத்தது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதில் பங்கேற்க உள்ள படங்களின் பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது. ஆனால் இதில் நாமினேஷன் சுற்றி கூட தேர்வு பெறாமல் வெளியாகியுள்ளது 2018 திரைப்படம். இந்த தகவல் இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
அர்மேனியா மற்றும் பூட்டான் உள்பட 15 நாடுகளின் படங்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் ஆஸ்கார் விருதிற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற 2018 படம் தேர்வு பெறாதது மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பெரும் எதிர்பார்ப்பில் இருந்த 2018 படக்குழுவிற்கு இந்த செய்தி பெரும் சோகத்தை அளித்துள்ளது.
