ஆஃப் ரோடு ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாகியுள்ள "Muddy" திரைப்படத்தின் மோஷன் பிக்சர் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தியாவில் ஆஃப் ரோட் ரேஸிங்கை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள முதல் திரைப்படம் "Muddy". ஆஃப் ரோட் ரேஸிங் அணிகளுக்கு இடையேயான மோதல்களை மையமாக கொண்டு, அதை சாகசம், காமெடி, என கமெர்சியல் திரைப்படத்திற்கான அனைத்து அம்சங்களுடனும் உருவாக்கியுள்ளார் அறிமுக இயக்குநர் பிரகபால்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆஃப் ரோட் ரேஸிங் காட்சிகள் எல்லாம் அபாயகரமான இடங்களில் படமாக்கப்பட்டிருப்பதால், ஆக்‌ஷன் திரில்லர் கலந்த இத்திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவமாக இருக்கும்.

PK7 கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் பிரேமா கிருஷ்ணதாஸ் தயாரித்துள்ள இந்த படத்தில், அறிமுக நடிகர் ஐ.எம்.விஜயன் கதாநாயகனாக நடித்துள்ளார். முன்னணி நடிகர்களான ரெஞ்சி பானிக்கர், ஹரீஷ் பெராடி, கின்னஸ் மனோஜ், ஷோபா மோகன் மற்றும் சுனில் சுகாதா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

கேஜிஎஃப் திரைப்படத்திற்கு இசையமைத்த ரவி பஸ்ரூர் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் ஒளிப்பதிவாளர் கேஜி ரதீஷின் ஒளிப்பதிவு, ராட்சசன் எடிட்டர் சான் லோகேஷின் படத்தொகுப்பு என மிகச்சிறந்த டெக்னீசியன்களின் உழைப்பில் உருவாகியிருப்பதால் “Muddy" திரைப்படம் கண்டிப்பாக ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இத்திரைப்படத்தின் மோஷன் பிக்சரை விஜய் சேதுபதி மற்றும் கன்னட நடிகர் ஸ்ரீ முரளி ஆகிய இருவரும் ரிலீஸ் செய்தனர்.