கமல்ஹாசன் நடித்து 1996 -ல் வெளியாகி வசூல் குவித்த 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் 'இந்தியன்-2 '  என்ற பெயரில் தற்போது தயாராகி வருகிறது.  இதில் கமலஹாசன் வயதானவராகவும் இளமையாகவும் இருவேடங்களில் நடிக்கிறார். ஷங்கர் டைரக்டு செய்கிறார். 

இதன் படப்பிடிப்பு, கடந்த மாதம் தொடங்க திட்டமிட்டு திடீரென தள்ளிவைக்கப்பட்டது. தற்போது பட வேலைகள் துவங்க தீவிரமாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில், கமலஹாசனுக்கு இரண்டு கதாநாயகிகள் ஜோடியாக நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஏற்கனவே காஜல் அகர்வால் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  இந்த படத்துக்காக வர்ம கலைகள் கற்று வருகிறார்.  இன்னொரு நாயகியாக நடிக்க தென்கொரிய நடிகை பே சூஸி யிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.  

இந்தியன் படத்தின் முதல் பாகத்தில், இறுதிக்காட்சி வெளிநாட்டில் முடிவடையும். இரண்டாம் பாகத்தில் தைவானில் கதை தொடங்கி இந்தியாவுக்கு வருவது போல் சங்கர் திரைக்கதை அமைத்து இருப்பதாக கூறப்படுகிறது. அதில் நடக்கும் காட்சிகளில் கமலஹாசனுடன் தென்கொரிய நடிகையை நடிக்க வைக்க ஷங்கர் முடிவு செய்துள்ளார்.

 பொங்கல் முடிந்ததும் இந்தியன்-2 படிப்பை தொடங்குகிறார். சென்னையிலும் பொள்ளாச்சியிலும் படப்பிடிப்பை நடத்துகின்றனர் கமலஹாசன் சில வாரங்கள் பொள்ளாச்சி பகுதியில் முகாமிட்டு படப்பிடிப்பு கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது