Indian part 2 going to irritate the politicians says famous actor

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் திரைக்குவந்து, கோலிவுட்டையே ஒரு கலக்கு கலக்கிய திரைப்படம் இந்தியன் 2. லஞ்சம் வாங்கும் அதிகாரிகளை எல்லாம் மிரளச்செய்த இந்த சூப்பர் ஹிட் திரைப்படத்தை, பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் தான் இயக்கி இருந்தார். இப்போது அவர் இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தினை இயக்க இருக்கிறார்.

இதிலும் கமலஹாசன் தான் ஹீரோவாக நடிக்க இருக்கிறார். ஆனால் இம்முறை ஒரு நடிகனாக மட்டுமல்லாமல், ஒரு அரசியல்வாதியாகவும் அவதாரம் எடுத்திருக்கும் கமலஹாசன் இத்திரைப்படத்தில் எந்த மாதிரி கதாப்பாத்திரத்தில் நடிக்க போகிறார்? என அறிய அவர் ரசிகர்கள் பேராவலுடன் இருக்கின்றனர்.

இந்நிலையில் நேற்று விஸ்வரூபம்-2 திரைப்படத்தின் டிரெயிலர் வெளியானது. இந்த டிரெயிலர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அந்த சந்தோஷத்தில் இருக்கும் கமலஹாசனிடம், இந்தியன் 2 படத்தை குறித்து கேட்டபோது அவர் தெரிவித்திருக்கும் பதில், இப்போதே பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்தியன் 2 திரைப்படம் முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த படம். இந்த படத்தில் நாட்டில் நடந்து வரும் பல குற்றங்கள் குறித்தும், வெளிப்படையாக பேச உள்ளோம். அதனால் பல அரசியல்வாதிகளுக்கு அது கண்டிப்பாக எரிச்சலை ஏற்படுத்தும். என தெரிவித்திருக்கிறார் கமல்.