‘இந்தியன் 2’ படத்துக்கு தொடர்ந்து சில நட்சத்திரங்கள் கமிட் பண்ணப்பட்டு வந்தாலும், உண்மையில் படத்தின் நிலவரம் கலவரமாக இருப்பதாகவும் இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்தும் நடுவே பட்ஜெட் தொடர்பாக பெரும் மனக் கசப்புகள் இருந்து வருவதாகவும் நம்பகமான தகவல்கள் நடமாடுகின்றன.

ஜனவரி 18ல் துவங்கி சுமார் பத்து நாட்கள் மட்டுமே நடந்த ‘இந்தியன் 2’ படத்தில், கமலுக்குப் போட்ட மேக் அப் கமலுக்கே பிடிக்கலை. அதனால ஷங்கருக்கும் பிடிக்கலை என்பதில் துவங்கி  ஏகப்பட்ட குழப்பங்கள் நடந்தன. எடுத்தவரை உள்ள காட்சிகளைப் பார்த்த ‌ஷங்கரும், கமலும் மேக்கப் இயல்பாகவும், பொருத்தமாகவும் இல்லை என்று கருதி இருக்கிறார்கள். எனவே படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். அடுத்த வாரம் அமெரிக்கா செல்லும் ‌ஷங்கர் அங்குள்ள மேக்கப் கலைஞர்களுடன் ஆலோசனை நடத்தி மேக்கப் டெஸ்ட் எடுக்க உள்ளார். மேக்கப் பொருந்திய பின்னர் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று அவ்வப்போது சில செய்திகள் வந்தன.

ஆனால் மேற்படி செய்திகளைத் தாண்டி இயக்குநர் ஷங்கரிடம் ‘இன்னொரு ‘2.0’ பட்ஜெட் ஆகி நாங்க தெருவுக்கு வர விரும்பலை. அதனால எங்களுக்கு கிளியரான பட்ஜெட் வேணும்’ என்று கறாராக கேட்கப்பட்டுள்ளதாம். இந்தக் கோரிக்கையில் ஷங்கருக்கு உடன்பாடு இல்லை. சும்மாவே ஒரு படத்தின் பட்ஜெட் குறித்து கேள்வி கேட்டாலே டென்சன் ஆகும் ஷங்கர் கமல் எப்போது கால்ஷீட் தருவார் என்று தெரியாத நிலையில் எப்படி தரமுடியும். ஆகவே தயாரிப்பாளர் பட்ஜெட் குறித்த கேள்விக்கு பதில் சொல்லாமல்  அமைதி காக்கும் ஷங்கர், படத்தை கைமாற்றி விடுவதற்காக தெலுங்கு அல்லது இந்தியில் மெகா தயாரிப்பாளர்கள் யாராவது மாட்டுவார்களா என்று வலைவீசத் துவங்கியிருக்கிறாராம்.