தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்திற்கு ஏற்றப்போல் தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகை நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'அறம்' , 'கோலமாவு கோகிலா' ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது அஜித்துடன் 'விஸ்வாசம்' விஜய் 63 - ஆவது படம் என தொடர்ந்து பிஸியாக பல படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை நயன்தாராவை இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க இயக்குனர் ஷங்கர் நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஏற்கனவே பல தகவல்கள் வெளிவந்தன. ஆனால் ஒரு சில காரணங்களால் நயன்தாரா 'இந்தியன் 2 ' படத்தில் நடிக்க மறுத்து விட்டார்.

தற்போது நயன்தாரா இந்த படத்தில் நடிக்க மறுத்ததன் காரணம் குறித்தும், இயக்குனர் ஷங்கர் காஜல் அகர்வாலை கமிட் செய்ய என்ன காரணம்? என்பது குறித்தும் தகவல் வெளியாகியுள்ளது.

நயன்தாரா இந்த படத்தில் நடிக்காததற்கு அவர் போட்ட சில கண்டிஷன்கள் தானாம். மேலும் இவர் கேட்ட சம்பளம் இயக்குனர் ஷங்கர் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தையே அதிர வைத்து விட்டதாம். 

இந்தியன் 2 படத்தில் நடிக்க நயன்தாரா ரூ.6 கோடி சம்பளமாக கேட்டதாகவும்,  இதனால் அதிர்ச்சியான பட தரப்பு நயன்தாராவே வேண்டாம் வேறு ஒரு ஹீரோயினை நடிக்க வைத்து விடலாம் என முடிவு செய்து, பின் நடிகை காஜல் அகர்வாலை கமிட் செய்ததாக  கூறப்படுகிறது.  

ஏற்கனவே 'இந்தியன் 2  ' படத்தில் கமலுடன் நடிகை காஜல் அகர்வால் ஜோடியாக நடிப்பது அதிகாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.